என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The young woman sacrifices"
- சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
- தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் சுலோச்சனா (32). இவரும் இவரது தாயார் சின்னப்பொண்ணு என்பவரும் மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற தனியார் டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
தவறி விழுந்தார்
அப்போது தனது தாயார் சின்னப்பொண்ணு பஸ்சில் ஏறாததை கண்ட சுலோச்சனா பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுலோச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து சுலோச்சனாவின் சகோதரி வெண்ணிலா (34) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் தாய் கண்ணெதிரே பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்து சென்று கொண்டிருந்த சாந்தி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி. இவர்கள் கடந்த 21-ந் தேதி, அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . பின்னால் அமர்ந்திருந்த சாந்தி, அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்லில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்