என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "theft of money"
- வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
- ப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது36). பூண்டு வியாபாரி. சம்பவத்தன்று வங்கியில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். வடுகபட்டியில் உள்ள பூண்டு கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு வைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கணேசனின் பைக் சீட்டின் அடியில் இருந்த ரூ.85 ஆயிரத்தை திருடிச் சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அவர்கள் உருவம் பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி அருகே தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜன் (32). இவர் தனது மோட்டார் சைக்கிளை தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடை முன்பு நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் திருடிச் செல்ல முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் கணேசனை கைது செய்தனர்.
- ஆஸ்பத்திரிக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.
- போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ஆகியோருடன் சேத்துப்பட்டுக்கு காரில் புறப்பட்டார். யாசினின் காரில் 3 பேரும் வந்தனர். காரில் சதீசின் பணம் ரூ. 13 லட்சம் இருந்தது.
சேத்துப்பட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காகவே 3 பேரும் ஒன்றாக காரில் வந்தனர்.
இந்த நிலையில் தனது பணத்தை நாளை வாங்கி கொள்கிறேன் என கூறி விட்டு சதீஷ் வளசரவாக்கத்தில் இறங்கி விட்டார்.
இதைத் தொடர்ந்து மற்ற இருவரும் சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று காரை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது. அதனை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி சேத்துப்பட்டு போலீசில் புகாார் அளிக்கபட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேவிபாலா வைத்து இருந்த ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரை சேர்ந்தவர் பாலமுருகன்.
இவரது மனைவி தேவிபாலா (வயது 37). சலவைதொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதற்காக மகள்களுடன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்து யாரோ மர்மநபர் தேவிபாலா கட்டைபையில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.
பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுப்பதற்காக பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த தேவிபாலா இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). டிரைவர். இவர் தனது சொந்த ஊரான சத்திக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
பஸ்சில் ஏறிய போது யாரோ மர்மநபர் கதிர்வேல் பேண்டின் பின் பாக்கெட்டில் ரூ.10,300 பணத்துடன் வைத்து இருந்த மணிபர்சை திருடி சென்றனர். இது அவரும் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
- மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.
மின்சார வயர் துண்டிப்பு
நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.
கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
அதிர்ச்சி
வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை-பணம் திருடப்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவளூர் கூட்டுரோட்டை சேர்ந்தவர் ஜானிபாஷா (வயது 54). இவர் வேலுாரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20,000 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த ஜானிபாஷா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே உரக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
- மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்ரோட்டில் பிரபல உரக்கடை ஒன்று உள்ளது. இந்த உரக்கடையை தொழுவந்தாங்கால் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வியாபாரி சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து விட்டு உரக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மீண்டும் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த கல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த 30,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பன்னீர்செல்வம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து உரக்கடையில் கைவரிசை காட்டிய மறுமணம் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் இதே போன்று பகண்டை கூட்ரோடு சாலை மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சூப்பர் மார்க்கெட் மருந்து கடை மொபைல் கடை, டீக்கடை போன்ற பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த கொள்ளை கும்பலை தடுக்கும் விதமாக போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்