என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thevar jayanthi"
- பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
- போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றன.
மதுரை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் பயணிப்பவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
அதனை கண்காணிக்கும் வகையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார், சாலைகளில் அதிநவீன கருவிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுதவிர பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.
இதற்கிடையே மதுரை புறநகரில் உள்ள சுற்றுவட்ட சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கான பணிகளில் சிலைமான், கருப்பாயூரரணி ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி மதுரை மாநகரில் 257 வாகனங்களும், புறநகரில் 72 வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
இன்று (30-ந்தேதி) குரு பூஜை விழா நடைபெற்றது. பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.
காலை 9 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சியினருடன் பசும்பொன் புறப்பட்டார். அங்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஆகியோரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு கட்சி, சமுதாய தலைவர்களும் பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்