என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukural"

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடியேற்று விழாவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாக்களில்,மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வெற்றிச்செல்வன், நந்தகோபால், மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ், பூபதி, முன்னவன், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
    • தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.

    சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    தமிழ்நாட்டை நாட்டின் முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக தனியார் முதலீடுகள் வருவதை உறுதி செய்துள்ளோம்.

    பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    வறுமை இல்லாத பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழ்நாடு அமைதியான பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    மதவாத அரசியல் நடத்தி மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து அரசியல் ரீதியாக லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது.

    வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பே மத்திய அரசுக்கு வராது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒன்றுமே இல்லை. பேரு தான் இந்தியாவுக்கான பட்ஜெட், ஆனால் உள்ளே எந்த திட்டங்களும் இல்லை.

    பட்ஜெட்டில் திருக்குறளை கூறினால் போதும் தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

    140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே வரிச்சலுகை.

    பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது ஏன் என்பது தான் கேள்வி.

    கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் பீகார் பீகார் என கூறினார்.

    பட்ஜெட்டில் நாடு என்றால் வெறும் மண் அல்ல, மக்கள் என்ற தெலுங்கு மொழி கவிதையை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டினார்.

    சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பீகார் பெயர் 6 முறை வந்தது. மதுரை எய்ம்ஸ், புதிய ரெயில் திட்டம், குடிநீர், வீடு என மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கழுகு 2 படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்க இருக்கும் ‘திரு.குரல்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் நடிக்க இருக்கிறார். #Krishna #Thirukural
    நடிகர் கிருஷ்ணா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கழுகு 2’. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து ‘கழுகு 2’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

    இப்படத்தை அடுத்து கிருஷ்ணா ‘திரு.குரல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இவருடன் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் பிரபு இயக்கும் இப்படத்தை என்.எச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் துவங்குகிறது. இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தை  விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
    ×