என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirukurungudi"
திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது23). டிரைவர்.
சம்பவத்தன்று இரவில் இவர் மலையடிபுதூரில் உள்ள மாடசாமி கோவில் கொடை விழாவிற்கு சென்றார்.
அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இசக்கிப்பாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிப்பாண்டி சுரேஷை அவதூறாக பேசி, தாக்கினார்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
- களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்
களக்காடு:
திருக்குறுங்குடி நம்பிதோப்பில் களக்காடு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகம் சார்பில் படிப்பகம், சூழல் இளையோர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
களக்காடு புலிகள் காப்பக சூழல்மேம்பாட்டு அதிகாரியும், துணை வன பாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி படிப்பகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தையல் அழகு கலை பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்களையும், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற லெவிஞ்சி புரம், நம்பி தலைவன் பட்டயம் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பை களும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.
அதனைதொடர்ந்து அவர் பேசியதாவது:-
சூழல் கோட்டத்தில் 653 கிராம வனக்குழுக்களும், 16 ஆயிரம் உறுப்பினர்களும், 20 கோடி நிதியும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிப்பது துறை சார்ந்த படிப்பு களாகத்தான் இருக்கும், அதை முழுமையாக்குவது புத்தகங்கள்தான். அதற்காகத்தான் கிராமங்கள் தோறும் படிப்பகத்தை அமைத்து வருகிறோம்.
வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூழல் இளையோர் விளையாட்டு குழு வீரர்கள் இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் களக்காடு புலிகள் காப்பக லோகோவுடன் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படும். மறந்து போன நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நெல்லை தனியார் கல்லூரி நாட்டார் வழக்காடு குழு சார்பில், சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு நாட்டுப்புற பாட்டு, நாட்டு புற விளையாட்டு, நாட்டுபுற கலைகள் குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நெல்லை அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் ராஜ மதிவாணன், திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கித்தாய், சூழல் திட்ட வனசரகர்கள் திருக்குறுங்குடி யோகேஸ்வரன், களக்காடு பிரபாகரன், அம்பை முகுந்தன், வனவர்கள் அப்துல் ரஹ்மான், சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சுகன் யா, கிராம வனக் குழு தலை வர்கள் கவிதா, அய்யம்மாள், பால சுப்பிர மணியன், பொ ன்னி வளவன். முன்னாள் வனக்குழு தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு உறியடி திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது.
களக்காடு:
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது.
இந்த கோவில் உறியடி திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு உறியடி திருவிழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது.
இதையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் கோவிலில் அருகில் ஓடும் நம்பியாற்றில் புனித நீராடினர். இதனை அடுத்து நம்பிசுவாமி–களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
மாலையில் முக்கிய நிகழ்ச்சியான உறியடி உற்சவம் நடந்தது. பக்தர்கள் உறியடித்தனர். இதனை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். அதனை–தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் திருமலை நம்பி எழுந்தருளி உலா வந்தார்.
உறியடி திருவிழா ஏற்பாடுகளை கண்ணன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். கோவிலில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டதால், வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினரும், திருக்குறுங்குடி போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது40). கூலி தொழிலாளி.
- சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள ராஜபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது40). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள குத்துபிறை அம்மன் கோவில் கொடை விழா பார்ப்பதற்காக ராஜபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவர், எனக்கு வேண்டாத முத்துகிருஷ்ணனிடம் நீ ஏன் பேசுகிறாய் என்று ராமரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ராமரை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.
களக்காடு:
திருக்குறுங்குடியை அடுத்துள்ள மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
அங்குள்ள மரங்கள் மற்றும் பொத்தையில் தஞ்சமடைந்துள்ள குரங்குகள் கூட்டம், கூட்டமாக வீடுகளுக்குள் சென்று பொருட்களை நாசம் செய்து வருகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் கொய்யா, மாதுளை போன்ற மரங்களை ஒடித்து விடுகின்றன. தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்து வீசுகின்றன.
மலையடிபுதூரில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகளையும் குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. நடப்பட்டு 1 மாதமே ஆன வாழைக்கன்றுகளின் குருத்துக்களை குரங்குகள் தின்று நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.
இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குரங்குகளின் அட்டகாசம் நீடிப்பதால் விவசாயிகள் அவைகளை விரட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
- முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஏர்வாடி:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருக்குறுங்குடி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, மருதம், பூவரசு போன்ற பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் இசக்கிதாய், துணைத்தலைவர் மோலி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருக்குறுங்குடி பேரூராட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது முதல் கட்டமாக 300 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் அடுத்த கட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. என பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்