search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirunelveli"

    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.
    • அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம் அதிகனமழைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது/ Tirunelveli Tenkasi district Schools tomorrow Leave for Heavy rains

    வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் இன்னும் பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தொடரந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது.
    • கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

    வரலாற்று சுவடுகள்

    கிருஷ்ணாபுரம் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன.

    வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது.

    புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ணாபுரம் கோவில் ஒரு வைணவ வழிபாட்டுத் தலம் ஆகும்.

    மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்பரால் (1564-1572) இக்கோவில் கட்டப்பட்டது.

    கிருஷ்ணப்பரின் மகன் வீரப்பரின் திருப்பணிகளும் இங்கு உள்ளன.

    கிருஷ்ணப்பர் நினைவாக இங்குள்ள கோவிலை அடுத்த ஊர் கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலிலுள்ள 'வீரப்பர் மண்டபமும், அரங்க மண்டபமும் உன்னத சிற்பங்களைக் கொண்டுள்ளன.

    வீரப்பர் மண்டபத்தின் முன்னுள்ள அர்ஜுனன், குறத்தி ராஜகுமாரனைத் தூக்கிச் செல்லுதல்,

    நாடோடிப் பெண்ணின் நடனம், கர்ணன், குறவன் அரசகுமாரியைத் தூக்கிச் செல்லுதல், தேவகன்னியின் நடனம் ஆகிய ஆறு கற்றூண் சிலைகள் யாவரும் பார்த்து வியக்கும் படியாக உள்ளன.

    அரங்க மண்டபத்திலுள்ள வீரபத்திரன், மன்மதன், பீமன், புருஷாமிருகம், தருமர் ஆகிய சிற்பங்கள் உள்ள

    கற்றூண்கள், நடனமாது, ரதிதேவியும் தோழிகளும், வீரபத்திரன் ஏவலாளர் ஆகிய சிற்பங்கள்

    நாயக்கர் காலச் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன.

    பீமன், புருஷாமிருகம், தருமர் உள்ள கற்றூணின் ஒரு பகுதியில் யானைக்கும், காளைக்கும் ஒரே முகம் இருக்கும் படியாகச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது விநோதமாக உள்ளது.

    கிருஷ்ணாபுரச் சிற்பங்கள் நமது அரிய கலைச் செல்வங்களாகும்.

    இக்கோவிலில் உள்ள கற்சிற்பங்கள் கலைநயத்துடன் தத்ருபமாக படைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது.

    தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி.

    சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

    • தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    மதுரை

    ரெயில்வே தேர்வு வாரியம் பல் பணியிட ங்களுக்கான 2-ம் கட்ட கணினி வழி தேர்வை வருகிற 16 ,17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    திருநெல்வேலி-பெங்களூரு சிறப்பு ரெயில் (06046) திருநெல்வேலியில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரூ சென்றடையும்.

     மறு மார்க்கத்தில் பெங்களூரு- திருநெல்வேலி சிறப்பு ரெயில்  (06045) பெங்களூருவில் இருந்து வருகிற 17-ந் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 

     தூத்துக்குடி - கர்னூல் டவுன் சிறப்பு ரெயில் (06047) தூத்துக்குடியில் இருந்து வருகிற 13-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னூல் டவுன் சென்று சேரும். 

    மறு மார்க்கத்தில்  கர்னூல் டவுன் - தூத்துக்குடி சிறப்புரெயில் (06048 ) கர்னூல் டவுனில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, எரக்குண்ட்லா, தாடி பத்திரி, துரோணாச்சலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

     கொல்லம் - திருச்சி சிறப்பு ரெயில் (06056) கொல்லத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 7.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருச்சி -கொல்லம் ரெயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரெயில் (06055) திருச்சியில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு கொல்லம் போய் சேரும்.

      இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், நாகர்கோ வில் டவுன் , திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது. 

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். 

    இந்த தகவலை தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் தெரி வித்துள்ளது.

    நெல்லை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது63), கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் அவருக்கு குடிக்க பணம் கிடைக்க வில்லை. இதில் மனமுடைந்த முருகன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×