என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruparangunram temple"

    • தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
    • குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

     திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-6-2023 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் சுப்பிரமணியசுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அப்பகுதியில் இந்திய வரைபடத்துடன் சுற்றி திரிந்த வங்கதேச வாலிபர் காலிமூசா என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் அச்சஉணர்வை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கைது செய்த போலீசார் நடவடிக்கையை சிவசேனா வரவேற்கிறது.

    மேலும் இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் வங்கதேசத்திலிருந்து காலிமூசா தமிழகத்தில் எப்போது நுழைந்தான்?, இந்திய வரைபடம் எதற்காக வைத்திருந்தான்?, சமூக விரோத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?,திருப்பரங்குன்றம் கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குண்டு வெடிப்பு போன்ற நாசவேலையில் ஈடுபட ஏதேனும் திட்டமிட்டு இருந்தானா? என பல்வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.


    விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மொத்தம் 1,216 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலியிட தடை விதிக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    மேலும் தைப்பூச விழா தொடங்க இருக்கும் நிலையில் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் காரணம் கூறியிருந்தனர்.

    இருந்தபோதிலும் இந்து முன்னணியின் அறப் போராட்ட காரணமாக மதுரை மாவட்டம் முழுவதி லும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

    போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மீறி வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.

    போராட்ட நாளான நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அரசியல் கட்சியினரோ, இந்து அமைப்பினரோ செல்ல 2-வது நாளாக தடை விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.

    ×