என் மலர்
நீங்கள் தேடியது "Thisaiyanvilai"
- சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
- சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.
சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.
- திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர்.
- தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் தசரா குழுவினர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி ஆடல், பாடல் நடத்தி கொண்டு இருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் ஒலிபெருக்கி வைத்து ஆடல், பாடல் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒலிபெருக்கியை எடுத்து சென்றனர்.
இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து முன்ணியினர் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். அதை தொடர்ந்துகோவில் தர்மகர்தாவிடம் போலீசார் ஒலிபெருக்கியை ஒப்படைத்தனர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மனைவி செல்வராணி (வயது 57). இவர் சம்பவத்தன்று திசையன்விளை பொம்மிநகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற திசையன்விளை இன்ஸ்பெக்டர் சீதா லெட்சுமி தலைமையிலான போலீசார் செல்வராணியை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான செல்வராணி மீது கஞ்சா வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் அடிக்கடி கைதாகி உள்ள செல்வராணி, தற்போது போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தை தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகருக்கு மாற்றிவிட்டார்.
அங்கிருந்து அவ்வப்போது திசையன் விளைக்கு வந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். யுவராஜ் குருரூபவ் முதலிடத்தையும், பிரதிவ் வாசன்ரூபவ் 2-ம் இடத்தையும், அஸ்வின் 3-ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்களை வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பாராட்டி பரிகளை வழங்கினார்.
- நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார்.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள இட்ட மொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் நாகலிங்கம் என்ற ராஜலிங்கம் (வயது 22). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் அறிவுறுத்தினார். அதன்படி நாகலிங்கத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் இன்று நாகலிங்கம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- காங்கிரஸ் பிரமுகர் மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.
திசையன்விளை:
காங்கிரஸ் பிரமுகர் சிங்கை முருகன். இவருடைய மகள் எலும்பு முறிவு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் மருத்துவ செலவிற்காக நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் சார்பில் மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன் அதற்கான நிதி உதவியை சிங்கை முருகனிடம் வழங்கினார்.
அப்போது ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், பணகுடி ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.
- உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார்.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள ஆவுடையாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகள் சரஸ்வதி(வயது 20).
விவாகரத்து
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.
சரஸ்வதியின் உறவு முறையான ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மாசானமுத்து (22) மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
அதற்கு சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசானமுத்து, ஆவுடையாள்புரம் மாயாண்டி மனைவி செல்வி (வயது 52), வள்ளியூர் முருகன் மனைவி சுதா(35) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் இசக்கியப்பன், அவரது தாய் அழகு மாடத்தி (75) ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்தனர்.
- ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் தலைமை தாங்கினார்.
10-ம் வகுப்பு மாணவர்கள் 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றியமையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.
மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இப்பயிற்சிகளை செய்தனர். சூர்ய நமஸ்காரம், விருட்சாசனம்ரூபவ், வஜ்ராசனமரூபவ், வீரபத்ராசனமரூபவ், உஸ்தாசனமரூபவ், யோகமுத்ரா போன்ற ஆசனப் பயிற்சிகள் மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தி உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது.
இறுதியில் யோகாசன பயிற்சியாளர் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.