search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "throng"

    • மதுரை ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பட்டாசு விற்பனையும் களைகட்டியது.
    • 15 நாட்களில் ரூ.150 கோடி வசூலானது.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி மற்றும் பட்டாசுகள் விற்பனை களைகட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக புது துணிமணி, பட்டாசுகள் வாங்குவதற்காக மாநகருக்குள் குவிந்துள்ளனர்.

    ஜவுளி கடைகள் அதிகமாக இருக்கும் விளக்குத்தூண், கீழவாசல், மேல ஆவணி மூல வீதி, கோரிப்பாளையம், தெற்கு வாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டத்தில் போலீசார் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கூட்டம் முண்டியடித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பெரிதாக சோபிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் நிம்மதியாக ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கி திரும்புகின்றனர். பட்டாசு கடைகளில் புதிய, புதிய ரக பட்டாசுகளை வாங்கி வந்து தெருக்களில் சந்தோஷமாக வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பெரிய- நடுத்தர- சிறிய ஜவுளி கடைகள் உள்ளன. இங்கு தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு 2 வாரங்களாக கூட்டம் அலைமோதியது.

    இது குறித்து மதுரை மாவட்ட ஜவுளி கடை விற்பனையாளர்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பது கொேரானாவுக்கு முந்திய காலகட்டத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. அப்போது வருமானம் பெரிய அளவில் இருந்தது.

    இதனால் எண்ணற்ற தொழிலாளிகளை வேலைக்கு நியமித்து, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி வந்தோம். கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களிடம் இப்போது பெரிய அளவில் பணப்பழக்கம் இல்லை.

    இருந்த போதிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜவுளி கடைகளுக்கு வருகின்றனர். அவர்கள் உயர்ந்த மதிப்பு உடைய ஆடைகளை எடுப்பதில்லை. குறைந்த விலைக்கு கிடைக்கும் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து புதிய ரக ஜவுளிகளை இறக்குமதி செய்து, கடந்த 15 நாட்களாக விற்பனை செய்து வருகிறோம். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் பெரிய ஜவுளி கடைகளில் ரூ.1 கோடி, நடுத்தர ஜவுளி கடைகளில் ரூ.40 லட்சம், சிறிய ஜவுளிக்கடைகளில் ரூ.3 லட்சம் என்ற அளவில் விற்பனை இருக்கும். கடந்த 15 நாட்களில் எங்கள் கடைகளில் 2,3 மடங்கு என்ற அளவில் விற்பனை நடந்து வருகிறது.

    இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் ஜவுளி கடையில் ஊழியர்கள் சம்பளம், மின்சார செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரித்து உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைத்து உள்ளது என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 15 நாட்களில் மட்டும் ரூ.150 கோடி என்ற அளவில் ஜவுளிக்கடைகளில் விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இது குறித்து பட்டாசு விற்பனை யாளர்கள் கூறுகையில், சிவகாசியில் இருந்து ஒட்டுமொத்தமாக பட்டாசுகளை கொள்முதல் செய்து சில்லரைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

    இப்போது புதிய புதிய ரகங்களில் பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சிவகாசி பட்டாசுகளின் விலை அதிகரித்து உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சிவகாசியில் இருந்து புதிய புதிய ரகங்களில் பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

    அவற்றின் விலை சிறிது அதிகமாக உள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசிக்கிறார்களே தவிர, பெரிய அளவில் வாங்குவதற்கு ஆர்வம் செலுத்துவதில்லை. மதுரை மாவட்டத்தில் பட்டாசு கடைகளை போட அரசு மற்றும் போலீசார் அதிக அளவில் கெடுபிடி செய்தனர்.

    இதன் காரணமாக மாவட்ட அளவில் 300-க்கும் உள்ளிட்ட கடைகள் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக 2-3 கோடி ரூபாய்கள் வரை விற்பனை நடந்து உள்ளது. இதில் முதலீடு கழித்து பார்த்தால், எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இதனை வைத்து கொண்டு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க முடியும்" என்றனர்.

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×