என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tindivanam"
- பஸ் நிறுத்தம் அருகே வரும் போது திடீரென என்ஜினீனில் புகை வெளியேறியது.
- பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து நெய்வேலிக்கு அரசு விரைவு பஸ் 18-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது திடீரென என்ஜினீனில் புகை வெளியேறியது.
புகையானது பஸ் முழுவதும் பரவிய நிலையில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். பின்னர் பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
- மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.
தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.
மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.
அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்து.
திண்டிவனம்:
சென்னையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெரம்பலூருக்கு சென்று கொண்டிருந்தது. இதை பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35) என்பவர் ஓட்டி சென்றார்.
திண்டிவனம் சென்னை புறவழிச்சாலை மரக்காணம் மேம்பாலம் மேல் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி உடைந்து சாலையில் சிதறியது. விபத்தில் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (38),லோடுமேன்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (22),மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (55) அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இதுகுறித்து அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
- திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் போது கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டே முகத்தை மூடியவாறு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீவைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் பற்றி தெரியாமல் செல்வதுடன் புகையினால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள உயிர் மரங்களும் தீயில் எரிந்து போகிறது. இதுபோல் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதனால் இந்த பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் வேறு ஒரு இடத்தில் குப்பை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டிவனத்தில் துணிகரம்: கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது
- திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மோட்டார்சைக்கிள் சென்றது.அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் தென்றல் நகரை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வுபெற்ற கண்டக்டர். இவரது மனைவி மல்லிகா (வயது 62) ஓய்வு பெற்ற அரசு செவிலியர். இவர்கள் மோட்டார்சைக்கிளில் திண்டிவனம் அடுத்த கீழ்கரானையில் கோவிலுக்கு சென்றுவிட்டு சுமார் இரவு பத்து மணி அளவில் திண்டிவனம் பஜார் வழியாக வீட்டிற்கு திரும்பினர்.
திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மோட்டார்சைக்கிள் சென்றது.அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து முனுசாமி திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற இடங்களில் கடந்த சில தினங்களாக ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞர் ஒருவரை விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார் . மேலும் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது 22) என்பதும் அவர் அந்த பகுதியில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.
திண்டிவன்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லதம்பி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கணேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.
அதன்பின்பு கொள்ளையர்கள் அருகில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அலுவலரான பாண்டுரங்கன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் ஏதும் உள்ளதா? என தேடி பார்த்தனர். அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணேசன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இதுகுறித்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கணேசன் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து கோவையில் உள்ள கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பிறகுதான் வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்பது தெரியவரும். அவர் உடனடியாக திண்டிவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சலவாதி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுடைய குழந்தைகள் அபிராமிஸ்ரீ(வயது 16). திருமுருகன்(14).
இதேபோல் பாஸ்கரின் உறவினரான முனுசாமி என்பவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். முனுசாமியின் மனைவி தேவி. இவர்களுடைய குழந்தைகள் அஸ்வினி(15), ஆகாஷ்(14).
சாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அபிராமிஸ்ரீ பிளஸ்-1 வகுப்பும், திருமுருகன் 9-ம் வகுப்பும், அஸ்வினி 10-ம் வகுப்பும், ஆகாஷ் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பாஸ்கர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர் முனுசாமியின் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக அருகில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார். அப்போது, பாஸ்கர், தான் சிறுநீர் கழித்து வருவதாகவும், தான் வரும் வரை கரையில் நிற்குமாறும் குழந்தைகளிடம் கூறி சென்றார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து பாஸ்கர் வந்து பார்த்தபோது, உடைகள் மட்டும் கரையில் இருந்தது. 4 பேரையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், செல்போன் மூலம் உறவினர்களுக்கும், திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில் இறங்கி மாணவர்களை தேடினர்.
அப்போது அபிராமிஸ்ரீ, அவரது தம்பி திருமுருகன், அஸ்வினி, அவரது தம்பி ஆகாஷ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். 4 பேரின் உடல்களும் ஏரிக்கரையில் வரிசையாக வைக்கப்பட்டது. அதனை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதனிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவ-மாணவிகளின் உடல்களை பார்வையிட்டு விசாரித்தனர்.
விசாரணையில், பாஸ்கர் நேற்று முன்தினம் 4 பேருக்கும் ஏரியில் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல் 2-வது நாளாக நேற்றும் நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக 4 பேரையும் ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார். உடனே 4 பேரும், தாங்களாகவே ஏரியில் இறங்கி நீச்சல் பயிற்சி பெற முயன்றுள்ளனர். ஆனால் முழுமையாக நீச்சல் தெரியாததால் அவர்கள், 4 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் வளர்குமார். இவரது மனைவி பூங்கொடி (வயது 38).
இவர் கொணக்கம்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பூங்கொடிக்கும், கள்ளக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த வாலிபரை வளர்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இது தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் பூங்கொடிக்கும், கணவர் வளர்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வளர்குமார், மனைவி பூங்கொடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்த வளர்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பூங்கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வளர்குமாரை தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வவிநாயகம் (வயது 25).
இவருக்கும் வடநெற்குணம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் முருக்கேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்அடிப்படையில் திண்டிவனம் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி. ஏட்டு ராதா, சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் சரோஜா, விரிவாக்க அலுவலர்கள் ஜான்சிராணி, வசந்தகுமாரி ஆகியோர் அங்கு சென்றனர்.
அவர்கள் மணமகன், மணமகளின் பெற்றோரை சந்தித்தனர். 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறினர்.
இதையும் மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. #Tamilnews
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.
இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்