என் மலர்
நீங்கள் தேடியது "Tirunelveli Murder"
- ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது.
- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது.
நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டுள்ளதாவது,
திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.
ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்.
- நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.
திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி!
இதுமட்டுமின்றி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் செய்திகளில் வந்தவை:
● சென்னை தி. நகரில் வங்கிக்குள் புகுந்து வங்கி ஊழியரின் காது வெட்டு
●சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை
●சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து.
"தனிப்பட்ட கொலைகள்" என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கடந்து செல்லப் போகிறது?
நிர்வாகத் திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.
மேற்சொன்ன குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போட்டோஷூட்டிலும், மடைமாற்று அரசியலிலும் மட்டுமே செலுத்தும் கவனத்தை தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கை காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற இந்த திமுக ஆட்சியின் அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 20, 2024
திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த இக்கொலையை காவல்துறையினர் தடுக்காமல்… pic.twitter.com/GA8vm0sBxd
- கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).
இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.
மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.
இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.
அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.
கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு.
- கொலை செய்த கும்பல் காரில் தப்பியோட்டம்.
நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி endraஇளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாயாண்டியை கொலை செய்ய ஏற்கனவே இரண்டு முறை முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிமன்ற வளாகத்திலேயே கொலை சம்பவம் அரங்கேறிய நிலையில், நான்கு பேர் கும்பல் காரில் ஏறி தப்பியோடியது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வெட்ட வெளிச்சத்தில் படுகொலை சம்பவம் அரங்கேறியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
- இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.
நெல்லை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.
நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-
எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.
ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் பசுபதி(வயது 23). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலையை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம். நேற்று வழக்கமாக அவர் செல்லும் வழியில் உள்ள சிவகாமி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பசுபதி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பணகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுபதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் கிடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கஞ்சா புதைத்துக்கொண்டிருந்த மர்மநபர்கள், போதையில் அந்த வழியாக வந்த பசுபதியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.