என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiruverkadu"
- கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு பகுதியில் கோலடி ஏரி உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வருவாய்த்துறை அதிகாரி கள் நடத்திய ஆய்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் 25-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருவதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி.எந்திரத்துடன் இடித்து அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோலடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பூந்தமல்லி:
திருவேற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வேத புரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் 40 அடி சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.
இதனால் சாலை மிகவும் குறுகலாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் திருவேற்காடு நகராட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் 2 ஜே.பி.சி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் சிவன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.
இதேபோல் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடு வெட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.
இதில் நகராட்சி கமிஷனர் சித்ரா,பொறியாளர் முத்துக் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர் குமார் உள்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதையொட்டி 2 இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்