search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TM Anbarasan"

    • அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
    • அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.

    அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.

    2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன்.
    • மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன். அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்.

    அண்ணாவின் பெயரால் புரட்சித் தலைவர் இயக்கம் கண்டபோதும் சரி, அவருக்குப் பின்னால் இந்த இயக்கத்தை அம்மா வழிநடத்திய போதும் சரி, கருணாநிதி எத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதையே இப்போது ஸ்டாலினின் தொண்டரடிப் பொடி யாழ்வார்கள் கையில் எடுத்திருப்பது, அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.
    • பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார் ஜெயக்குமார்.

    சென்னை:

    காஞ்சீபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தி.மு.க.வினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை.

    மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

    உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
    • கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் தொழில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சுய தொழில் முனைவோருக்காக ரூ. 961 கோடியே 58 லட்சம் மானியத்துடன் சுமார் ரூ. 2,818 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 30 ஆயிரத்து 324 இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கப் பட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற கடந்த 10 ஆண்டுகளில் 55 ஆயிரத்து 230 நபர்கள் மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் முன்னோடி திட்டமாக தமிழக அரசால் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ. 159.40 கோடி மானியத்துடன் ரூ.302.86 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1369 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    பின்தங்கிய தென் மாவட்டங்களில் ரூ. 262.13 கோடி மானியத்துடன் ரூ. 769.27 கோடி வங்கி கடன் உதவியுடன் 9,594 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை போல் வரும் பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் தலைமையில் உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் சிறு குறு நிறுவன துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 170 ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.69 கோடியே 15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் ராக்கெட் தொழில்நுட்பம் சம்பந்தமான தொழிற் சாலைகளை தொடங்குவதற்கு முன் வருபவர்களுக்கு உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்படும்.

    தமிழக அரசின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 சிட்கோ தொழிற்பேட்டைகளில் 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.

    பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை நூற்பாலை மற்றும் வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை முழுமையாக கையகப்படுத்தி அங்கும் புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

    புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிகாரிகளை ஊக்குவித்து இளைஞர்களை புது தொழில் முனைவராக உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது.
    • ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டலம் சார்பில் ரூ.50 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மண்டல குழு தலைவர் என். சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது. இன்னும் 3 முதல் 4 மாதத்திற்குள் பரங்கிமலை வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், ஆலந்தூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆதம்பாக்கம் பகுதியில் சாக்கடை தேங்குவதால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அமைக்க தரவேண்டும் என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    ஆலந்தூர் தொகுதியில் உள்ள நிலமங்கை நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைசர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்ததாவது:- நிலமங்கை நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க முதல்- அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

    தா.மோ.அன்பரசன்:- 1996-2001-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் 24 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டது.

    தற்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் புதிய குடியிருப்புகள் அதிகரித்ததால் கழிவுநீர் அகற்றும் நிலையம் போதிய திறன் சக்தி இல்லாததால் மழைக்காலத்தில் ஆதம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.

    இந்த நிலையை போக்க இதே திறன் கொண்ட மேலும் ஒரு கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அதே பகுதியில் அமைத்து தர வேண்டும். இதை மழை காலத்திற்குள் அமைத்து தர வேண்டும்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி:- நிலமங்கை நகர் கழிவுநீர் அகற்றும் நிலையத்தின் உட்பகுதியில் 150 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காலியிடத்தில் கூடுதலாக தினமும் 10 மில்லியன் லிட்டர் உந்து திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க ரூ. 26 கோடியே 10 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி பெற்று பணிகள் துவங்கும்.

    தா.மோ.அன்பரசன்:- கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் பகுதிக்கு ரூ. 66 கோடி செலவில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படாததால் ஆலந்தூர் பகுதியில் பல இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

    ஆலந்தூரில் 82 தெருக்களில் குடிநீர் குழாய்கள் மாற்றுவதற்காக ரூ. 13.71 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை வேகமாக செயல்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    வேலுமணி:- பணிகள் வேகமாக முடித்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×