என் மலர்
நீங்கள் தேடியது "TNEB"
- நேரு நர்சிங் கல்லூரியில் மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.
- மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தின் சார்பாக மின் சிக்கன வார விழா நேரு நர்சிங் கல்லூரியில் கொண்டாடப் பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் டி.டி.என் லாரன்ஸ் மற்றும் கல்லூரி முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மின் சிக்கனம் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த குமார், செல்வ கார்த்திக், பத்மகுமார், உதவி மின் பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரிசல்பட்டி, பிள்ளைகுளம்,காணியாளர் குடியிருப்பு, பட்டன் காடு, இடையன்குளம்,கங்கணாங்குளம்,பத்தமடை,கோபால சமுத்திரம்,மேலச்செவல்,வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடையான்குளம், வெங்கட்ர ங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், இகாடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன.
- கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
சென்னை:
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தொடங்கியது.
டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இணைக்காததால், வரும் 31-ந்தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாததோடு, அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) மாநில செயலாளர் எஸ்.கண்ணன் கூறும்போது, இவ்வளவு நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
மேலும், நுகர்வோரின் தரவுகளை முறையாக சேமித்து வைக்கும் அளவுக்கு மின் வாரியத்தில் இணைய தள கட்டமைப்பு வசதி இல்லை. விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கணக்கீட்டு பிரிவு மற்றும் கள பணி ஊழியர்கள் இப்பணியை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதால், அவர்களால் தங்களுடைய பணியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதனால் ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர். அரசிடம் ஆலோசித்து இதற்கு தீர்வு காணப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
- 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
15-ந் தேதி வரை நீட்டிப்பு
இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31-ந் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்ப ட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். இன்னும் குறைந்த அளவிலான பொது மக்களே ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீதி உள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
100 சதவீதம் நிறைவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஆதார் இணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி கூறியபோது, நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 114 மின் நுகர்வோர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று 31-ந் தேதி வரை தங்கள் ஆதார் எண்களை 100 சதவீதம் இணைத்துள்ளனர்.
இதற்காக பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
- நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
- 7 கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வாயிலாக ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
11 லட்சம் மின் இணைப்பு
தமிழகத்தில் அதிகமான மின் நுகர்வோர்களை கொண்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்த வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 722 ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் முதல் நெல்லை கிராமப்புற கோட்டம், நகர்ப்புற கோட்டம், தென்காசி கோட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கடையநல்லூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், வள்ளியூர் கோட்டம் ஆகிய 7 கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.
புதுப்பிக்கும் பணி
இந்த பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு மின்வாரியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்த பிறகு மின் நுகர்வோர் புதிதாக வீடு மாறினாலும், சொந்தமாக வீடு வாங்கினாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.
- ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.
படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வந்தனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் மூலமும் ஆதார் எண்களை இணைத்து கொடுக்கின்றனர்.
இதில் இதுவரை மொத்தம் 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க இந்த மாதம் 15-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் இதுவரை இணைக்காதவர்கள் மின்வாரிய அலுவலகம் சென்று பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதாவது வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் (வினியோகம்) அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்களை 97.98 சதவீதம் பேர் இணைத்து உள்ளனர்.
ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிக அளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.
எனவே ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிர மசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விக்கிரமசிங்கபுரம், காரையார்,சேர்வலார், பாபநாசம்,வீகேபுரம், சிவந்தி புரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விளைபட்டி, முதலியார் பட்டி மற்றும் ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏபி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல் புதூர், ஆம்பூர்,பாப்பான் குளம், சம்மன் குளம், செல்லபிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ஜான் பிரிட்டோ மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறி யாளர்களும் கலந்து கொண்டனர்.
- சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.
பின்னர் இதனால் இலவச மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அரசு சார்பில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் டிசம்பர் 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஆதாரை இணைக்காததால் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர் சென்டரிலும் சென்று ஆதாரை இணைத்தனர். ஆனாலும் 40 லட்சம் பேர் ஆதாரை இணைக்காமல் இருந்தனர்.
அதனால் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. வருகிற 15-ந்தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதற்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இதையடுத்து மீதமுள்ள மின்நுகர்வோர்கள் ஆதாரை இணைப்பதில் தீவிரம் காட்டினார்கள். 90 சதவீதத்திற்கு மேல் ஆதாரை இணைத்துவிட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்களும் களத்தில் இறங்கினர். இன்னும் 4 நாட்களே இருப்பதால் வீடுவீடாக சென்று ஆதாரை இணைத்து வருகின்றனர்.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களின் வீட்டிற்கே சென்று ஆதாரை இணைக்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொந்த வீட்டில் வசிப்பதாக இருந்தாலும் அவர்களின் ஆதார் எண்ணை வாங்கி அந்த இடத்திலேயே பதிவு செய்கின்றனர்.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி அங்கிருந்தவாறே ஆதார் எண்ணை பெற்று மின் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர். ஒரு வீட்டில் 4, 5, 6 பதிவு மின் இணைப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்து இந்த பணியை விரைவாக முடிக்கிறார்கள்.
15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
- தமிழகத்தில் இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர்:
தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய தரவுகள் இல்லாததால் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிப்ரவரி 15-ந்தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்காமல் இருந்தனர்.
இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் 4-ந்தேதி நடைபெறும் அரசு விழாவில் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இதுவரை தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகளை இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது. எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறுகிய காலத்தில் 2.66 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.
சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
- 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதவாது:-
நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி வருகிற 7-ந் தேதி (செவ்வாய்கிழமை) வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14-ந் தேதி (செவ்வாய் கிழமை) நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை நகர் புறகோட்ட அலுவலகத்திலும், 20-ந் தேதி (திங்கட்கிழமை) தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 28-ந் தேதி (செவ்வாய்கிழமை) கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடையநல்லூர் கோட்டத்தில் பெருந்திரள் மின்னாய்வு பணி நடைபெற்றது.
- ஆய்வு பணியில் மொத்தம் 1,914 மின் இணைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் கடையநல்லூர் பிரிவு - 1 அலுவலகத்தில் வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி உத்தரவுப்படி பெருந்திரள் மின்னாய்வு பணி நடைபெற்றது.
அபராதம்
இந்த பணிகளை கடைய நல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் (பொது) சைலஜா, உதவி மின்பொறியாளர் (பொது) மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்டத்தில் இருந்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு பணியில் மொத்தம் 1,914 மின் இணைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மின்வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட வீதப்பட்டியலை முறை கேடாக மாற்றி பயன்படுத்திய 9 மின் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.62,275 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்த 9 மின் இணைப்புகளும் மின் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சரியான வீத பட்டியல் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. 134 மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதற்கு மின் நுகர்வோர்களிடம் அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.