என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tnstc"
- பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.
மதுரை:
மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.
அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-
கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.
பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார்.
- பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
- நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கள் கிழமையில் வருகிறது. அந்த வகையில், பொங்கலுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் உள்ளன. இதன் காரணமாக பொங்கலுக்கு முந்தைய வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர், ஜனவரி 12-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
வழக்கமாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-ம் தேதி சொந்த ஊர் செல்லும் பயணிகள் நாளை நேரிலும், TNSTC வலைதளம் அல்லது செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
- அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை:
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி சுமார் 60000 பயணிகளில் 20.000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது.
இதன்காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51.046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது.
- ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
- பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.
- இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
திருப்பூர் :
அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டத்தின் கீழ்திருப்பூர் மண்டலம் உள்ளது. உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட 8 கிளைகள் உள்ளன.மாவட்டத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் எனநாள் ஒன்றுக்கு 559 பஸ்கள் அதிகாலை முதல் இரவு வரை இயக்கப்படுகிறது.ஆனால் ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கிராமப்புற போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
பணிச்சுமை அதிகரித்து டிரைவர், கண்டக்டர்கள் மனவேதனை, உடல்நலக்குறைவிற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக தற்போதுள்ள டிரைவர், கண்டக்டர்களே தொடர்ந்து பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.குறிப்பாக சில கிராம வழித்தடங்களில் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்களை நம்பி பயணிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து டிரைவர்கள் சிலர் கூறியதாவது:- கடந்த ஆட்சியின் போது ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் பல டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு பெற உள்ளனர்.இதனால்ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஏற்கனவே தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீண்டும் பஸ்களை இயக்க முற்படுவதால் போதிய ஓய்வின்றி, மன அழுத்தம், உடல் நலக் குறைவுக்கு உட்படுகின்றனர்.காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து அரசு பஸ்கள் தடையின்றி இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஆனால், செலவு பல மடங்கு உள்ளது. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.14 கோடி வரை நஷ்டத்தில் இயங்குகிறது. நிதி நெருக்கடியை சரிசெய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.
முதல்கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்குமாறு அறிவுறுத்தினர். ஏற்கனவே, நெல்லை மதுரை மண்டலத்துடன்தான் இருந்தது. 2010-ல் நெல்லை புதிய மண்டலம் உருவாக்கப்பட்டது. தற்போது, நெல்லை மண்டலத்தில் மட்டும் சுமார் 1897 பஸ்கள் மற்றும் 30 டெப்போக்கள் உள்ளன. 12,478 பேர் பணிபுரிகின்றனர்.
மொத்தம் உள்ள 8 மண்டலத்தில் நெல்லையில்தான் மோசமாக உள்ள பஸ்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் இயக்கப்படும் 90 சதவீத பஸ்கள் காலாவதியானவை. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மண்டலத்தை இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வல்லுநகர் குழு பரிந்துரையை ஏற்று திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரையுடன் இணைத்து இன்று அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளது. #TNSTC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்