search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toddy"

    • முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் கருத்து.

    கல்பாக்கம் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனகபுரீஸ்வரர் கோயில் அருகில் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் முக்கிய கோரிக்கையாக, கள் இறக்க அனுமதி, அதை பதப்படுத்தி வைக்க குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ம.பொ.சி பெயரில் அரசு விருது கொடுக்க வேண்டும், கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பனை, தெண்ணை மரங்களில் இருந்து தொழிலாளி விழுந்து இறந்தால் அரசு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பதநீர் மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், " காமராஜரும்- ம.பொ.சி யும் நாணயத்தின் இரு பக்கங்கள். விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு உரிமம் வழங்கியது போல் தமிழக அரசும் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்" என்றார்.

    தமிழ்நாடு நிலதரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    • தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.
    • டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.

    பல்லடம்:

    கள் இறக்கும் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்து கொள்வோம். இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கள் இறக்குவது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறிய கருத்து தவறாக பரவியுள்ளது.அவர் அப்படி கூறவில்லை .இருந்த போதிலும் அந்த தவறான செய்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது.

    மேலும் கள் இறக்க அனுமதி வேண்டும் என்று போராடி வருகிற விவசாய சங்க தலைவர்கள் மனதும் வேதனைப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். விவசாய சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட தவறான செய்தி காரணமாக அமைந்து விட்டபடியால், நடந்துவிட்ட தவறுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் படுகின்ற கஷ்டத்தை கருத்தில் கொண்டு டெல்லி வரை சென்று மத்திய விவசாய அமைச்சரை சந்தித்து கள் இறக்க அனுமதி கிடைக்க போராடுவோம்.

    தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமான பாமாயிலை தடை செய்ய வேண்டும், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். தமிழக முழுவதும் உள்ள தேங்காய்களை மத்திய அரசு நேபிட் மூலமாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியது.

    மேலும் தமிழக அரசின் உணவுதுறை அமைச்சரை சந்தித்து ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தியுள்ளோம். அவரும் கொள்கை அளவில் அதனை ஏற்று பரிட்சார்த்தமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    வெளி சந்தையில் தேங்காய் எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 200க்கு விற்கப்படுகிறது ரேசன் கடையில் என்ன விலைக்கு விநியோகிப்பீர்கள் என்று அவரை கேட்ட பொழுது, அரை லிட்டர் ரூ.25 க்கு விநியோகம் செய்யப்படும். மேற்கொண்டு அதிகப்படியான தொகையை அரசு மானியமாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தென்னை விவசாயின் கஷ்டம் நீக்கப்பட்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதுதான் உழவர் உழைப்பாளர் கட்சியின் நோக்கம்.

    இதில் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேறுபாட்ைட உண்டாக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.மேலும் 2024 ஜனவரி 21ஆம் தேதி தமிழக முழுவதும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று கள் இயக்க தலைவர் நல்லசாமி அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்து அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசு பெண்களின் வாக்கு வங்கியை கவர்வதற்காக கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 அறிவித்தது.தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் வங்கிகளுக்கு சென்று பார்த்த போது பாதி பேருக்கு பதிவும் வரவில்லை, பணமும் வரவில்லை. இதனால் வங்கிகள் முன்பும், இ. சேவை மையங்கள் முன்பும் பெண்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    அரசு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து தேர்தல் அறிவிப்பில் கூறியதை போல் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், ஊடக பிரிவு செயலாளர் காடம்பாடி ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
    • கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

    பல்லடம்:

    தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பல்லடத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்க தடை தொடர்ந்து இருந்து வருகின்றது. கள் தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.

    கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. அது ஒரு உணவு. அதை இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு. கள் போதை பொருள் தான் என நிரூபிப்போருக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இதுவரை யாரும் முன் வரவில்லை. கள்ளுக்கான தடையை நீக்கினால் சுமார் 60 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

    தமிழ்நாட்டில் கள்ளுகடை திறக்கச் சொல்லவில்லை. எங்களுக்கு கள்ளுக்கான தடையும் வேண்டாம் கள்ளுகடையும் வேண்டாம். இதனை வலியுறுத்தி வரும் ஜனவரி 21ந்தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.காவிரி பிரச்சனையை பொறுத்த வரையில் கர்நாடகா மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றது. தமிழகத்தின் பங்கீட்டு தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
    • ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    அவிநாசி:

    தமிழகம் முழுவதும் ஜனவரி 21 ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி அவிநாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது. ஏலம், கடைகள் என்று இருந்தால், ஒரு மரத்துக்கு கள் கிடைக்காது. ஆகவே கள்ளு கடை வேண்டாம். கள்ளுக்கான தடை நீக்க வேண்டும். இதை முன்வைத்து, அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.

    காவிரி நீா் பிரச்னையில், நாள்தோறும் நீா் பங்கீடு என்ற அம்சம் தீா்ப்பில் இடம் பெற்றிருந்தால் தீா்வு எளிதாக இருந்திருக்கும். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்றாா்.

    • ‘கள்’ விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • 5 லிட்டா் ‘கள்ளை’ பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த மண் கலயங்களையும் அழித்தனா்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே உள்ள சடையபாளையம் பகுதியில் 'கள்' விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனா்.

    அப்போது அங்கு கள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.அங்கிருந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவா் சடையபாளையம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (வயது57) என்பதும், கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து ஈஸ்வரமூா்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டா் 'கள்ளை' பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் இறக்கப்பயன்படும் மண் கலயங்களையும் அழித்தனா். 

    • தென்னை விவசாயிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.
    • உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுப்பழக்க த்திற்கு ஒட்டுமொத்த சமுதா யமே அடிமையாகியுள்ளது. முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏன் பள்ளி மாணவ, மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாகிய மோசமான சூழ்நிலையில் உள்ளது. ஏகபோக மது விற்பனையால் சுமார் ரூ.50 விற்க வேண்டிய மதுபானப்பாட்டில் ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள், மீனவர்கள், போன்ற உடல் உழைப்பாளிகள், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்க முடியாமல், போதை க்காக கள்ளச்சாராயம், விஷ சாராயம் போன்றவற்றை நாடி செல்கின்றனர்.

    இதனால் மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலி போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. மேலும் மதுபானங்கள் குடிப்பதால் உடல்நல கேடு மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஏழைகளின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    இதனால் நஷ்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கள் அருந்துவதின் மூலம் உடலுக்கு தீங்கு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்ப ட்டுள்ளது. உலகில் வேறு எங்கும் கள்ளிற்கு தடை இல்லை, மற்றதற்கெல்லாம் முன்னோடி அரசு என்று சொல்கின்றவர்கள் இதற்கும் முன்னோடியாக இருக்கலாமே.

    எனவே தென்னை விவசா யிகளுக்கு பயனளிக்கும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்கும் கள் விற்பனையை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில செயலாளர் சின்னக்காளி பாளையம் ஈஸ்வரன்,மாநில பொருளாளர் பாலசுப்பி ரமணி, ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கள் விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் மற்றும் நாதேகவுண்டம்பாளையம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக காமநாயக்க ன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் நேற்று போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் வி.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் கங்கை அமரன் (வயது 44 ) என்பவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்ய ப்பட்டது. அது போல் நாதே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் பழனிசாமி (58 ), ராஜாமணி என்பவரது மகன் கார்த்திகேயன் (43) ஆகிய 2 பேரிடம் இருந்து மொத்தம் 5 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.மேலும் காட்டூரை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் சங்கர் (35) என்பவரிடம் இருந்து 3 லிட்டர் கள் என மொத்தம் 10 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பென்னாகரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தில் இருந்து கள் இறக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    பென்னாகரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது பென்னாகரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மரத்தில் இருந்து கள் இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது. 

    இதைபோன்று பென்னாகரம் அடுத்துள்ள பூனைகுண்டு காட்டு கொல்லை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.
    ×