என் மலர்
நீங்கள் தேடியது "tomato price"
- மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.
- விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், "பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத் தொடங்கியவுடன் விலை குறையும். அதேசமயம் கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது பெரிய வித்தியாசம் இல்லை. உருளைக்கிழக்கு மற்றும் வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது" என்றார்.
- தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
- தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று தக்காளி விலை கிலோ ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்காளியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி மொத்த விலை கிலோ ரூ.100-க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனையில், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்யலாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்படும்.
- தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
சென்னை:
தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
- மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
- வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி விலை பெரிதாக குறையவில்லை.
போரூர்:
தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
இதைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு இன்று 48 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. மொத்த விற்பனை கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
மொத்த விற்பனையில் விலை குறைந்து உள்ள போதிலும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி விலை பெரிதாக குறையவில்லை.ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பருவமழை மற்றும் வரத்து குறைவால் விலை ஏற்றம்
- சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலையிலும் ஏற்றம்
தக்காளி விலை ஏறிக்கொண்டே இருந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கோயம்போடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 10 ரூபாய் அளவில் குறைந்தது. இதனால் சில்லறை விலையில் 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மொத்த விற்பனை காய்கறி சந்தையில் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில் 120-க்கும் மேல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று கோயம்பேட்டில் சாம்பார் வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 130 ரூபாயாக அதிகரித்துள்ளது. சந்தைக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
- ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- திருடுவதற்காக ஒரு கூட்டம் சுற்றுகிறது.
பெங்களூரு :
நாட்டில் கடந்த சில தினங்களாக தக்காளி பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு தக்காளியின் அதிர வைக்கும் விலை உயர்வு தான் காரணம். ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள், மாதுளை பழங்களுக்கு ஈடாக தக்காளியின் விலையும் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விலை உயர்வால், தக்காளி திருட்டை தடுப்பதற்காக விவசாயி ஒருவர் தனது கடையில் கண்காணிப்பு கேமராவை வைத்த சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நடந்துள்ளது.
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அக்கிஅலுரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது கடையில் தக்காளியை விற்பனை செய்கிறார். இந்த நிலையில் விலை உயர்வால் சில இடங்களில் தக்காளிகள் திருடப்படுவதால் பயந்துபோன கிருஷ்ணப்பா, தனது கடையில் தக்காளி திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா ஒன்றை வைத்துள்ளார். சாலையோர கடையில் தக்காளி பெட்டியில் கண்காணிப்பு கேமராவை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது தக்காளி விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அத்தியாவசிய பொருள் என்பதால் அதை வாங்க வேண்டி உள்ளது. இதனால் அவற்றை திருடுவதற்காக ஒரு கூட்டம் சுற்றுகிறது. மேலும் கூடுதல் தக்காளி கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் தகராறு செய்கிறார்கள். கண்காணிப்பு கேமரா இருந்ததால் இதுபோன்ற பிரச்சினையால் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.
- தக்காளியை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த விவசாயி பர்வதம்மா கடும் வேதனை அடைந்தார்.
- திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது விழுந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் இருந்த ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தக்காளியை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த விவசாயி பர்வதம்மா கடும் வேதனை அடைந்தார்.
இதுபற்றி பர்வதம்மா கூறுகையில், 'எங்கள் குடும்பத்தினர் தக்காளி பண்ணையை எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்தனர். இரண்டு ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தோம். இதற்கு முன்பு எதுவும் கிடைக்கவில்லை. சில சமயம் தக்காளி வளரும், ஆனால் அவை பழுக்காது. இந்த முறை நல்ல மகசூல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் யாரோ திருடிச் சென்றுவிட்டனர்' என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
நாங்கள் பண்ணையில் மிகவும் கடுமையாக உழைத்தோம். என் கணவரால் பேச முடியாது. எங்களின் உழைப்பையும் பணத்தையும் கொட்டினோம், ஆனால் அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து நேற்று இரவு 20 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள பெரிய அளவிலான ஓட்டல்களில்கூட தக்காளி பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது
- தக்காளி பயன்படுத்தக் கூடிய உணவுகள் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டு விட்டன.
சென்னை:
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தக்காளியின் பயன்பாட்டை குறைத்து விட்டனர்.
1 கிலோ, 2 கிலோ என தக்காளி வாங்கிய மக்கள் இப்போது கால் கிலோ, அரை கிலோ, 100 கிராம் என குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி அதிகமாக வந்தாலும் விலை குறையவில்லை. வெளி மாநிலங்களில் அதிக விலைக்கு வாங்கி வருவதால் இன்னும் சென்னையில் தக்காளி விலை குறைய வில்லை. சில்லறை காய்கறி கடைகளில் தக்காளி கிலோ ரூ.100, ரூ.120 என்றே விற்கிறார்கள்.
தமிழக அரசு கூட்டுறவுத் துறை மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்றாலும்கூட அவை போதுமானதாக இல்லை. குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனை செய்யப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.
தக்காளி விலை குறையாமல் இருப்பதால் ஓட்டல்களில் தக்காளி பயன்பாடு கணிசமாக குறைக்கப்பட்டு விட்டன. சாம்பாருக்கு மட்டும் ஏதோ சிறிதளவு பயன்படுத்துகின்றனர்.
தக்காளி பயன்படுத்தக் கூடிய உணவுகள் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டு விட்டன. தக்காளி சட்னி வாடிக்கையாளருக்கு வழங்குவது இல்லை. அதற்கு பதிலாக புதினா, கொத்தமல்லி சட்னி வழங்குகின்றனர். சைவ ஓட்டல்களில் மதியம் விற்பனை செய்யப்படும் தக்காளி சாதம் நிறுத்தப்பட்டு உள்ளது.
ரூ.40, ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி சாதம் மதிய உணவில் பெரும்பாலும் சேர்த்து கொள்வார்கள். தக்காளி விலை உயர்வால் தக்காளி சாதமே அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பெரிய அளவிலான ஓட்டல்களில்கூட தக்காளி பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. சாலையோர கையேந்தி பவன், சிறிய ஓட்டல்களில் கூட தக்காளி சட்னி, சாதத்தை பார்ப்பது அரிதாகி விட்டது.
இதேபோல வீடுகளில் அன்றாட சமையலில்கூட தக்காளி பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. அனைத்து காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்ட நிலையில் மக்கள் குறைந்த அளவிலேயே அன்றாட தேவைக்கு மட்டுமே வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறும்போது, தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகள் விலை உயர்ந்ததால் மக்கள் குறைந்த அளவிலேயே வாங்குகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. தினசரி தேவைக்கு மட்டுமே காய்கறிகளை வாங்குகின்றனர். இதனால் வியாபாரமும் குறைந்து உள்ளது என்றனர்.
- பருவகால சிக்கல்களினால் தக்காளியை வாங்க முடியவில்லை என மெக்டொனால்டு நிறுவனம் கூறியிருக்கிறது.
- தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அமெரிக்காவை தளமாக கொண்ட உலகப்புகழ் பெற்ற 'மெக்டொனால்டு' நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது உணவகங்களின் சில கிளைகளில் தயாரிக்கப்படும் அனைத்து ரெசிபிக்களிலும் குறுகிய காலத்திற்கு தக்காளி பயன்படுத்தப்படாது என அறிவித்திருக்கிறது.
மெக்டொனால்டின் இந்தியா-வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தக்காளி கொள்முதலில் ஏற்பட்டிருக்கும் பருவகால சிக்கல்கள் காரணமாக, மெக்டொனால்டின் தயாரிப்புகளில் தக்காளி பயன்படுத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உணவின் தரம் மற்றும் பாதுகாப்பில் நம்பகமான ஒரு பிராண்டாக நாங்கள் இருந்து வருகிறோம். கடுமையான சோதனைகளுக்கு பின்னரே பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், பருவகால சிக்கல்களினால் தக்காளியை எங்களால் வாங்க முடியவில்லை. எனவே, எங்களின் சில உணவகங்களில் எங்கள் மெனுவில் தக்காளியை பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்துகிறோம். இது ஒரு தற்காலிக பிரச்சினை. விரைவில் தக்காளியை மீண்டும் எங்கள் மெனுவில் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்கிறோம்" என கூறியிருக்கிறது.
ரெசிபிகளில் தக்காளியை நீக்கியதற்கு விலையேற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் தக்காளியை தவிர்ப்பதற்கு, தக்காளியின் விலை உயர்வை காரணமாக மெக்டொனால்ட் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தக்காளியின் விலை கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் விலை டெல்லி, கொல்கத்தா, மற்றூம் உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் கிலோ ரூ.130-150 எனும் அளவை எட்டியுள்ளது.
தக்காளி விலை உயர்வை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி அரசு கிலோவுக்கு ரூ.115 என கிடைக்க வழி செய்திருக்கிறது. தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60 என மானிய விலையில் விற்கப்படுகிறது.
மெக்டொனால்டு உணவகம் தக்காளியை தனது தயாரிப்புகளில் இருந்து நீக்குவது இது முதல் முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில், வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மெக்டொனால்டு கிளைகள், தக்காளியின் தரம் குறைந்ததால் 'பர்கர்' தயாரிப்புகளில் அதனை பயன்படுத்துவதை சில நாட்கள் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
- இஞ்சி, பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. தக்காளி சாகுபடி சீரடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முதல் ரகம் தக்காளி கிலோ ஒன்றிற்கு 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோவுக்கு 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் இன்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1 கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கங்கோத்ரி பட்டணத்தில் ரூ.250, யமுனோத்திரியில் ரூ .200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
பெங்களூருவில் ரூ.101 முதல் 121 வரையும், கொல்கத்தாவில் 152 க்கும், டெல்லியில் 120-க்கும், சென்னையில் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மும்பையில் ரூ.108-க்கும், உத்தரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.162-க்கும், ராஜஸ்தான் மாநிலம் சுருவில் ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் தக்காளி விலை சரிந்து வருகிறது.
சென்னையில் உள்ள ரேசன் கடைகளில் தமிழக அரசு மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
- தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும் தகவல்.
தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை பெரிதாக பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இப்போது வருவாய் என்பது பெரிய விஷயமே இல்லை. சாதாரண கூலித்தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மக்கள் மத்தியில், ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.
இப்போது விலைவாசி ஏறும் சமயத்தில் மக்கள் பெரிய அளவில் சிரமப்படவில்லை. அதற்கு ஏற்ற வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. வருவாய் கூடுதலாக வருவதால் ஓரளவு சரிசெய்ய முடிகிறது.
தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.