search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists Allowed"

    • மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து சென்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.

    இன்றுகாலை நீர்வரத்து சீரானது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் உற்சாகமாக குளித்து சென்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 130.30 அடியாக உள்ளது. 466 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1233 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 52.03 அடியாக உள்ளது. அணைக்கு 1124 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.35 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 106.93 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 5.2, பெரியாறு 15.6, போடி 1.6, ஆண்டிபட்டி 4.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
    • இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும் அணையை கண்டு ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது. இதனால் 5-ந் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தினமும் தடுப்பணையில் தண்ணீர் அதிமாக கொட்டி யதால் தொடர்ந்து பொது மக்கள் அணைக்கு செல்ல கடந்த 12 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினமும் பொது மக்கள் வந்து ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறை ந்தது.

    இதையொட்டி 12 நாட்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் கொடி வேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்ப தற்கும் கண்டு ரசிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனால் இன்று காலை குறைந்த அளவே பொது மக்கள் வந்திருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். அவர்கள் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது.

    இதையடுத்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. ஜூன் மாதம் முழுவதும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் திடீரென குறைந்தது. ஒருவாரத்திற்கு பின் அருவிகளில் மீண்டும் தண்ணீர் கொட்டத்தொடங்கியது.

    சாரல் மழை, குளுகுளு காற்றுடன் குற்றாலத்தில் சீசன் களை கட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று 3-வது நாளாக அந்த அருவிகளில் குளிக்க தடை நீடித்ததால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று இரவு ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அந்த இரு அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவி தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கு குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. இதனால் அந்த அருவியில் 3 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியின் நடுப்பகுதிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. குற்றாலம் மலைப்பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மலைப்பெய்து வருகிறது.

    மேலும் காற்றும் வேகமாக வீசி வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் தண்ணீர் வரத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்தபடி உள்ளனர்.



    ×