என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Trade Agreement"
- இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.
மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.
- ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா தரப்பில் இருந்தே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
திடீரென பேச்சுவார்த்தை நிறுத்திக் கொள்வது பற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருப்பதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே கிட்டத்தட்ட ஆறு முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.
- செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
- ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அவிநாசி :
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இளம் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து வர்த்தக வாய்ப்புகளை அதிகம் ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர் துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் சந்திப்பு கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் பேசியதாவது:- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் உலகளாவிய தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
அத்திட்டத்தின் இரண்டாம் பகுதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு, குறு உற்பத்தியாளர்களும் பயன் பெறுவர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் கனடா மற்றும் பிரிட்டன் நாட்டுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.
இதன் மூலம் வர்த்தகம் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் நம்மை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. இதனால் இந்திய நுகர்வோருக்குத் தரமான பொருட்களை மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு முக்கியமான தருணம் இதுவாகும்.
இந்த ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பில் திறன்களை மகத்தான முறையில் அதிகரிப்பதுடன் இருதரப்பு வணிகங்களையும் வலுப்படுத்தும். இந்தியாவில் விரைவில் உங்களை வரவேற்கும் தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்