என் மலர்
நீங்கள் தேடியது "train derailed"
- பணிமனையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு சென்றபோது பெட்டிகள் தடம் புரண்டன.
- ரெயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரெயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இதனை அறிந்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக அந்த ரெயிலை நிறுத்தினார். அந்த பகுதிக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு மீண்டும் அந்த ரெயிலுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்தது. பெட்டிகள் தடம் புரண்ட போது அதில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
- இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டத்தில் இன்று பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், வேகமாக வந்த ரெயில் தடம்புரண்டது.
இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், ரெயில் பயணிகள் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு, விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்.
- மூன்றில் இரண்டு பயணிகள் பெட்டிகள் ஆகும். பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சாலிமார் செல்லும் செகந்திராபாத்- சாலிமார் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒன்று பார்சல் பெட்டியாகும். இரண்டு பயணிகள் பெட்டியாகும்.
22850 எண் கொண்ட இந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரெயில் தெரிவித்துள்ளது.
- விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட ரெயிலில் தரம் புரண்டது.
- சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாண்டும்போது இந்த ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படடனர்.
ரெயில்வே ஸ்டாஃப்கள் மற்றும் இன்ஜினீயர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் மற்ற ரெயில்களுக்கான வழி உடனடியாக சரி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாரா? அல்லது சதி வேலையா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.