என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transfers"

    • தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.

    • 11 தாசில்தா ர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்துமாவட்ட கலெக்டர்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
    • தனிதாசில்தார் ரங்கநாதன்செஞ்சி தாசி ல்தாராகவும் மாற்ற ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட த்தில் 11 தாசில்தா ர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்துமாவட்ட கலெக்டர்மோகன் உத்தரவிட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விபரம் வருமாறு:- 

    வானூர் தனி தாசில்தார் பிரபு வெங்கடேஷ்வரன் பெலாக்குப்பத்துக்கும், கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தார் கார்த்திகேயன் வானூருக்கும், செஞ்சி தனி தாசில்தார் அலெக்சாண்டர் மேல்மலையனூருக்கும், கண்டாச்சிபுரம் தனிதா சில்தார் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன் கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தாராகவும், மரக்கா ணம் தனிதாசில்தார் ரங்கநாதன்செஞ்சி தாசி ல்தாராகவும் மாற்ற ப்பட்டுள்ளனர். பெலாக்குப்பம் நில எடுப்பு தனிதாசில்தார் தங்கமணி திண்டிவனம் தனிதாசில்தாராகவும், விழுப்புரம் மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலவலகத்துக்கும், திண்டி வனம் தனிதா சில்தார் கற்ப்பகம் கண்டாச்சிபுரம் தனி தாசில்தாராகவும், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வழ ங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாள ராகவும், விழுப்புரம் அலுவலக மேலாளர் சுந்த ரராஜன் மரக்காணம் தனிதா சில்தாராகவும், மேல்மலையனூர் வருவாய்தாசில்தார் கோவர்த்தனன் வானூர் வருவாய் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்.

    பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #IAF #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

    இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது. 

    விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.

    இந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய  விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #IAF  #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
    லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஒருவர் திடீரென குமரி மேற்கு மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    சப்-இன்ஸ்பெக்டரின் இடமாற்றத்திற்கு அவர் ஒரு வழக்கில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரே காரணம் என்று கூறப்படுகிறது. இது போலீசார்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பல்வேறு வழக்குகளை   திறமையாக விசாரித்தவர் என பெயர் பெற்றவர்.

    இவருக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக சென்றார். செல்போன் பேசியபடி அவர் வாகனம் ஓட்டியதால் அவரை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வழி மறித்து நிறுத்தினார்.

    இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாலிபர், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். பின்னர் அந்த வாலிபர் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிக்கப்பட்ட வாலிபர் ஒரு தொழில் அதிபரின் மகன் ஆவார். வழக்கில் இருந்து வாலிபரை விடுவிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கியதாக ரகசிய தகவல் வெளியானது. இது அரசல் புரசலாக உயர் அதிகாரிகளுக்கு தெரியவர அவர்கள் இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பேரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் மீது இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    ×