என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transported"
- போதைபொருட்கள் அல்ல, தண்ணீர் கேன்களில் கடத்தியது விவசாய உரம் என்று ராமநாதபுரம் கடலோர எஸ்.பி. விளக்கமளித்துள்ளார்.
- ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள வேதாளை கடற்கரை சாலையில் கடந்த 28-ந் தேதி மண்டபம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது 25 லிட்டர் கொண்ட 30 தண்ணீர் கேன்களில் வெள்ளை நிற பவுடர் 394 கிலோ இருந்தது தெரியவந்தது. அவை போதைப்பொருட்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இது தொடர்பாக காரில் வந்த கீழக்கரை சங்குழித்தெருவைச் சேர்ந்த சாப்ரஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் கேன்களில் இருப்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உர மூலப்பொருட்கள் எனவும், அதனை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனாலும் சந்தேகமடைந்த போலீசார் அந்த பவுடர்களை சோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் உர மூலப்பொருட்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் எஸ்.பி. சுந்தரவடிவு வெளி யிட்டுள்ள அறிக்கையில், கைப்பற்றப்பட்ட பவுடர்கள் போதைப்பொருட்கள் அல்ல, அவை இயற்கை உரங்கள். அதிக பணம் மதிப்புடைய இதனை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.
இந்த செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் சாப்ரஸ் நவாஸ், ஜெயினுதீன் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் மண்டபம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள என்று குறிப்பிட்டுள்ளார்.
- கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது.
- இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமே சென்றுவர அனுமதி உள்ளது.
உள்ளூர் கிராம மக்கள் தவிர வேறு வாகனங்கள் செல்ல வனத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகாராஜன்புரம் மற்றும் தலமலை ,திம்பம் பகுதியில் வனத்துறையினர் 3 சோதனைசாவடி அமைத்துள்ளனர். வாகனங்கள் சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படும்.
இந்தநிலையில் நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 16 மாடுகளை ஏற்றிகொண்டு சரக்கு வேன் தடை செய்யப்பட்ட சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளது. இந்த சோதனைச் சாவடி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது பற்றி ஆசனூர் வனகோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு வேனை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் தலமலை வனச்சரகர் சதீஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு சென்று தடை செய்யப்பட்ட வனச்சாலையில் சென்ற சரக்கு வேனை மாடுகளுடன் பறிமுதல் செய்து தாளவாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்