என் மலர்
நீங்கள் தேடியது "Trespass"
- அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
- கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் சதீஷ் (வயது26).
இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாதி பெயரை கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
- உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார்
- மார்க்கின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
அமெரிக்கவில், மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26) என்பவர் ஒரு புது வகையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ளது ஸ்டேட்லைன் ரிசார்ட் எனும் குடியிருப்பு பகுதி. இங்கு ஜூலை 1-லிருந்து 3-ம்தேதி வரை அதிகாலை நேரங்களில் பூட்டப்படாத 2 தனித்தனி குடியிருப்புகளுக்குள் மார்க் புகுந்திருக்கிறார்.
அந்த வெவ்வேறு வீடுகளிலும் ஒரே குற்றத்தை புரிந்திருக்கிறார்.
முதலில் அவர் பூட்டப்படாத ஒரு வீட்டின் உள்ளே சென்றார். அங்கு உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து கொண்டார். பிறகு அந்த பெண்ணின் உள்ளங்கால்களை நீண்ட நேரம் தடவினார். கால்களை ஏதோ உரசுவது போன்ற உணர்வில் அப்பெண் உறக்கம் கலைந்து எழுந்தார். கட்டிலுக்கருகே ஒருவன் அமர்ந்திருப்பதை கண்ட அப்பெண் திடுக்கிட்டு கூக்குரலிட்டார். உடனே மார்க் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதேபோன்று அதே குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு பெண் வீட்டிலும் நுழைந்து மார்க், இவ்வாறு நடந்து கொண்டார்.
மார்க் பல குற்றங்களுக்காக கலிபோர்னியா காவல்துறையால் முன்பே அறியப்பட்டவர். அவர் மீது பெண்கள் காலணி திருட்டு, அத்துமீறி உள்ளே நுழைதல், மற்றும் அத்துமீறி நுழையும் இடங்களில் பாலியல் ஆசைகளை முறையற்ற வழியில் தீர்க்க முற்படுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
அவரின் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி, அத்துமீறி உள்ளே நுழைதல் மற்றும் அத்துமீறி பிறரை தீண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக மார்க் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மெர்செட் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நிவேடா மாநில டக்ளஸ் கவுன்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார். "இதுபோன்ற குற்றங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்," என இச்சம்பவம் குறித்து டக்ளஸ் கவுன்டி ஷெரீப் டான் கவர்லி கூறினார்.