என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tribal Girl"
- சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.
- இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மழைக்காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்ட வடிவத்தை அப்பெண் முன்னெடுத்துள்ளார்.
பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
"சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாகவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி இதுவாகும்" என்று அப்பெண் தெரிவித்தார்.
#WATCH | MP: Sheopur Woman Performs 'Dandavat Parikrama' Through Mud To Draw Sarpanch's Attention Towards Condition Of Village During Rains#MadhyaPradesh #mpnews pic.twitter.com/eqWoJJ84Em
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 15, 2024
- திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம்.
- பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் வழக்கம் போல இந்த ஆண்டும் தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த சுகனவிலாசம் (வயது 30). அவரது மனைவி அனிதா (27). வங்கி ஊழியரான அனிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளார்.
இந்த நிலையில் அனிதாவுக்கும் குழந்தை பிறந்ததால், அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனிதா கூறியதாவது:-
நான் இந்த இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது.
அதற்கு பரிகாரமாக இந்த கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்க கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல்பட்டனர்.
நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் போலீசார் எங்களை கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர். இந்த நிலையில் ஒரு வழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம் என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கேட்டபோது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் அந்த பெண்ணை அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப் பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
- “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஜேஇஇ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
- தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது.
திருச்சி:
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரோகிணி கூறுகையில்,
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜேஇஇ (JEE) தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
திருச்சி என்ஐடியில் (NIT) சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
- ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.
வெளியே ஓடிவந்து பார்த்த போது , வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம். சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறினாள்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.
முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்