என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribe"

    • பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
    • திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில்நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்ட அளவில் உள்ள பழங்குடி யின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவார ணங்கள், நலத்திட்டங்கள் மற்றும் சான்றுகள் வழங்கு தல் மற்றும் அவர்களுக்கு தேவையான பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.
    • சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் இனக்குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

     சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றுள் பல இனக்குழுக்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறது. சில பழங்குடிகள் மட்டுமே வெளியுலகத்தின் வசதிகளை பெற்று தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளனர்.

    உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவின் அருகில் உள்ளதால் அமேசானில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சமீப காலங்களில் நிகழலாமல் இல்லை. அந்த வகையில் 2000 மக்களை கொண்ட ஒரு பழங்குடி குழுவினர் வசிக்கும் பகுதிக்கு உலக பணக்காரனாரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த வருடம் இணையதள வசதியை கொண்டுவந்தது.

     

     

    அப்போதிலிருந்து தொலைத்தொடர்பில் அந்த பழங்குடி மக்கள் மேம்பட்டிருந்தாலும் அந்த இனக்குழுவின் மூத்தவர்களால் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடிவதில்லை. அதாவது இந்த பழகுடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக மாறிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

     

    சமூக வலைத்தளங்களிலும், ஆபாசப் படங்களிலும் இந்த மக்கள் நாள் முழுவதும் மூழ்கியுள்ளதாகக் குழுவின் மூத்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இணையதளத்தால் ஏற்படும் நன்மைகளையும் அவர்களால் புறக்கணித்து விட முடியாததால் செய்வதறியாது அப்பழங்குடியின மூத்தவர்கள் விழிக்கின்றனர். 

    • பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
    • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியம் கலாச்சாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடித்து வருகிறார்கள்.

    இயற்கையின் படைப்பில் விவசாயம் மற்றும் எருதுகள் மேய்ப்பது உள்ளிட்டவை இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையாகும். தற்போது சமகாலத்தில் கல்வி, பொருளாதாரம் என மேம்பட்டாலும், தங்களது பாரம்பரியத்தை கைவிடாது வாழ்ந்து பண்டிகைகளை கொண்டாடி வருகிறார்கள்.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் அய்யனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டுகின்றனர். இதனை கம்பட்ராயர் திருவிழா எனவும் அழைக்கின்றனர்.

    இவர்கள் வெளி ஆட்களை தங்களது புனித இடத்திற்குள் அனுமதிப்பது இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் வெண்ணிற ஆடை அணிந்து திருவிழாவை கொண்டாடுகின்றனர். வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான கம்பட்ராயர் திருவிழா கடந்த வாரம் ஊட்டி அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் தொடங்கியது.

    முதல் நாளில் ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் கோவிலில் காணிக்கைகள் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடக்கும் இந்த விழாவில் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர். நேற்று அய்யனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

    கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். கோத்தர் இன ஆண்கள் 5க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகளை இசைக்க தொடங்கினர். அவர்கள் இசைக்க தொடங்கியதும், அங்கு கூடியிருந்த கோத்தர் இன ஆண்களும், பெண்களும் வட்டமாக நின்று கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.

    அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண உடைகள் அணிந்து வந்தனர். அப்போது தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனமாடினர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு இயற்கை துணைபுரிய வேண்டி இந்த திருவிழா நடைபெறுவதாக கோத்தர் இன மக்கள் தெரிவித்தனர். இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

    அமேசான் காட்டில் தனது இனத்தினர் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் காட்டுவாசி ஒருவர் தன்னந்தனியாக ஒருவர் 22 ஆண்டுகளாக வசித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmazonJungle
    பிரேசிலியா:

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள்.

    வெளியாட்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் நிர்வாணமாக அவர்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி திரிகிறார்கள்.

    அமேசான் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணைகளை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.

    இவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996-ம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட காட்டுவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் அவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

    காட்டுவாசி வசிக்கும் குடிசை வீடு.

    வெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்துள்ளார். அங்கு தான் வசித்து வருகிறார்.

    அவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயல்பாட்டை பிரேசில் நாட்டில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    சமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.  #AmazonJungle

    ×