என் மலர்
நீங்கள் தேடியது "Triseries"
- இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஈஸ்ட் லண்டன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது.
ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் டியோல் 46 ரன்னும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய சோலி டிரையோன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
- இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ரன்கள் விளாசி அவுட்டானார்.
இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், 150 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ படைத்தார்.
இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ரன்கள் தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19 ஆவது வீரர் என்ற சாதனையையும் மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்துள்ளார்.
- கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் விளாசினார்.
- கான்வே 97 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
மூன்று அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 8-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது.
லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னெர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியில் போஸ்ச், மிலானி மோங்க்வானா, மேத்யூ பிரீட்ஸ்கீ, முத்துசாமி ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் தொடக்க வீரரான பிரீட்ஸ்கி சிறப்பாக விளையாடி 148 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 150 ரன்கள் விளாசினார்.
அறிமுக போட்டியில் 150 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். வியான் முல்டர் 64 ரன்களும், ஜேசன் ஸ்மித் 41 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், வில் ஓ'ரூர்கே 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வில் யங் 19 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டேவன் கான்வே உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 18.2 ஓவரில் 100 ரன்களை கடந்த நியூசிலாந்து 30.1 ஓவரில் 200 ரன்களை கடந்தது.
கான்வே 64 பந்தில் அரைசதமும், கேன் வில்லியம்சன் 44 பந்தில் அரைசதமும் அடித்தனர். தொடர்ந்து இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

கேன் வில்லியம்சன் 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் கான்வே சதத்தை எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 1 சிக்சர் இடங்கும். கான்வே- கேன் வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 10 ரன்னிலும், டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
என்றாலும் கேன் வில்லியம்சன் கடைசி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். நியூசிலாந்து 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133 ரன்னுடனும், பிலிப்ஸ் 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.
கராச்சி:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
- 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
- பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
இப்போட்டியில் 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார். அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் பவுமா சிறிது நேரம் அதே இடத்தில் நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளி சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயலுக்கு கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.