search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two people arrested"

    செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ். மாத்தூர் 108 ஆம்புலன்ஸ்க்கு உஞ்சினி கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சுடன் உஞ்சினிக்கு சென்றனர். அங்கே சென்ற ஊழியர்கள் அவசர அழைப்பு விடுத்தவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

    இதில் ஓட்டுநர் சரவணன் காயமடைந்தார். இது குறித்து சரவணன் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியது உஞ்சினி கிழக்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுரேஷ் அண்ணாதுரை மகன்கள் விஜய் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் விஜயை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

    தலைமறைவாக உள்ள அருணை இரும்புலிக்குறிச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தருமபுரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி கொல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் எஸ்.வி. ரோட்டில் பீடா கடை நடத்தி வருகிறார். மதேஸ்வரன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று மாதேஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது போன்று அரூர் அருகே கீழ்பாட்சா பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (53என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை அரூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    என்எல்சி சுரங்கத்தில் காப்பர் வயர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி.நிறுவனம் 2-வது சுரங்கபகுதியில் நேற்று மாலை 2 பேர் சாக்குமூட்டையுடன் சுற்றித் திரிந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புபடை வீரர் அழகர்சாமி அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தார். அவர்கள் வைத்திருந்த சாக்குபையை பிரித்து பார்த்தபோது காப்பர் வயர் திருடி வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் வடலூர் பார்வதிபுரததை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 51), சஞ்சை (28) ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட 3,984 மதுபாட்டில்கள்-1,600 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அல்லிவிளாகம் பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 83 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 984 மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவர் நன்னிலம் தாலுகா கூத்தனூரை சேர்ந்த வெற்றிவேந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இதைப்போல மயிலாடுதுறை அருகே கருவி முக்கூட்டில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,600 சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சண்முகவேல் (37) என்பவரை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வர பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
    சிவகாசியில் மதுபானம் குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பு முனையாக, உயிரிழந்தவரின் அக்காள் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Sivakasi #PoisoningDeaths
    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானம் வாங்கிக் குடித்த சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இதில், காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2 கடைகளில் மது வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதேசமயம், மதுவில் யாராவது விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கியது.



    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோழிக்கறியில் விஷம் கலந்துகொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. முருகனின் அக்கா வள்ளியும் அதே பகுதியைச் சேர்ந்த அச்சக அதிபர் செல்வமும் நெருங்கி பழகியதாகவும், அதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வள்ளியும் செல்வமும் சேர்ந்து முருகனை தீர்த்துக் கட்ட கோழிக்கறியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் மது அருந்தும் போது சாப்பிட்டதால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வள்ளியையும் செல்வத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Sivakasi #PoisoningDeaths

    ×