என் மலர்
நீங்கள் தேடியது "Union Minister Jaishankar"
- உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக இருக்கிறது.
- கடந்த 8 ஆண்டுகளில் தேசிய அளவில் பல முக்கிய முடிவுகளை தைரியமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்திருக்கிறது.
சென்னை:
'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். விழாவில் அவர், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ எழுதிய 'நினைத்து பார்க்கிறேன்' என்ற நூலின் தொகுப்பை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் இந்திய மக்களே அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. உதாரணத்துக்கு 'உக்ரைன்' மீதான ரஷியா போரில் அங்கு வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக அமைந்தன.
உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு நிச்சயம் முன்னேறும். அந்த அளவு பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் மிகுதியாக எதிரொலித்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் தேசிய அளவில் பல முக்கிய முடிவுகளை தைரியமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசத்துக்கும் மத்திய அரசு சென்றதில்லை. பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது. இன்று உலகத்திலேயே இந்தியா மிகவும் பொறுப்பான நாடாக விளக்குகிறது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான, மிக முக்கியமான நாடாக திகழ்கிறது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை எல்லா நாடுகளும் பெருமையுடன் பார்க்கின்றன. மற்ற நாடுகளைவிட நமது வேகம் அதிகமாக இருக்கிறது. உலக நாடுகளில் பறந்து விரிந்த நிலப்பரப்பு கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க நாடு இந்தியா. ஒரு காலத்தில் வணிக தளமாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று முன்னணி நாடாக திகழ்ந்த உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.
'பெண்குழந்தைகளை வளர்ப்போம் பாதுகாப்போம்' போன்ற மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் நலத்திட்டங்கள், உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒருகாலத்தில் பேரிடர் காலங்களில் உலக நாடுகளின் உதவியை இந்தியா எதிர்நோக்கி இருந்தது.
கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் மிகப்பெரிய வல்லமைக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. 100 உலக நாடுகளுடன் கூட்டணி வைத்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.
வளரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை பெற்று இருக்கிறது. உலக நாடுகளுடன் நட்புறவிலும் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது. இதனாலேயே உலக நாடுகளுக்கு மிகவும் முக்கிய தேவையான நாடாக இந்தியா தற்போது மாறி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 'துக்ளக்' வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பதிலளித்தார்.
விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, மூத்த தலைவர் எச்.ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோ:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிக்க உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்கிறார்.
#WATCH | External Affairs Minister Dr S Jaishankar meets Russian Foreign Minister Sergey Lavrov at the Russian MFA Reception House in Moscow. They will also hold bilateral talks.
— ANI (@ANI) December 27, 2023
(Source: Russian MFA) pic.twitter.com/fXUaBZCZgb
- மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
- நேபாள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
புதுடெல்லி:
இரண்டு நாள் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடெல் மற்றும் பிரதமர் புஷ்ப கலம் தாஹல் ஆகியோரை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் செல்கிறார்.
- ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் செல்கிறார். நாளை மறுதினம் அங்கு ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் சென்றுள்ளார்.
- ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெஹ்ரான்:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் அதிபர் சையத் எப்ராகிம் ரைசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
- சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும்.
சென்னை:
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்றாலும் உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலியானார்.
இப்போதும் தமிழக மீனவர்கள் 70 பேர் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் பறிமுதல் செய்த 170 படகுகளையும் இதுவரை திருப்பி தரவில்லை.
எனவே சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் 170 படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று மீனவர்கள் வலி யுறுத்தி வருகிறார்கள்.
இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர் பிரிவு தலைவர் நீலாங்கரை முனுசாமி மற்றும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி சென்றனர்.
இன்று மாலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார்கள்.
அப்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகள் பற்றியும் மந்திரியிடம் வலியுறுத்துகிறார்கள்.
- 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது.
- எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை 23.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள
நிலையில், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியும், கைது
செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (23.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்
சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், 22.02.2025
அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர்
23.02.2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்வதாகவும், இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை
மீண்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி
நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
- நியூசிலாந்து பிரதமரை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்தார்.
- அப்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.
ஆக்லாந்து:
நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா காலத்தின்போது தடுப்பூசி தயாரிப்புகளில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் இருந்து வருகிறோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.
ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கையிலெடுத்துக் கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயம்.
5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா இந்த தசாப்தத்தின் முடிவில் 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்னை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அந்நாட்டின் வெளிவிவகார மந்திரி நனையா மகுதாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டார்.