என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கோகோ காப் மற்றும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.
    • கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ஜெர்மன் வீராங்கனை லாரா சீக்மண்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சீக்மண்ட் கைப்பற்றி கோகோ காப்பிற்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் எழுச்சி பெற்ற காப் கடைசி 2 செட்களையும் எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த போட்டி முடிவில் கோகோ காப் 3-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதில் நடந்த மற்றொரு போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான டென்மார்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி ரஷிய வீராங்கனை டாட்டியானா பிரோசோரோவா உடன் பலபரீட்சை நடத்தினார். இதில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.
    • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மெத்வதேவ் மற்றும் கிறிஸ்டோபர் ஓ'கானல் மோதினர்.

    இதில் மெட்வெடேவ் 6-2 6-2 6-7 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல இன்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெகுலா மற்றும் பாட்ரிசியா மரியா டிக் மோதினர். இதில் பெகுலா 6-3 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பென் ஷெல்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக கரோலினா முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சக நாட்டு வீரரான பிரான்சிஸ் தியாபோவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 6-2, 3-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    அரையிறுதி சுற்றில் பென் ஷெல்டன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் சொரானா சிர்ஸ்டியா - கரோலினா முச்சோவா மோதின. இந்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3 முறையாக இவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில் 2-வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3-வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4-வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.

    இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக இவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    • 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
    • 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

    2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதன் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.

    ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

    இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், முதல் சுற்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • மரியா சக்காரி காயம் காரணமாக விலகினார்.
    • இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச் (ஆண்கள் ஒற்றையர்), கோகோ காப் (பெண்கள் ஒற்றையர்) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரியா சக்காரி (கிரீஸ்), 80-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யபாங் வாங்கை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை மரியா சக்காரி 2-6 என்ற கணக்கில் இழந்த நிலையில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். இதற்காக மைதானத்தில் சிகிச்சை பெற்ற சக்காரி வலி தாங்க முடியாததால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் யபாங் வாங் வெற்றி பெற்று முதல் நபராக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு ஆட்டத்தில் 24-ம் நிலை வீராங்கனையான டோனா வெகிச் (குரோஷியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெல்லை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை டாரினா கசட்கினா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜாக்லின் கிறிஸ்டினை (ருமேனியா) வெளியேற்றினார்.

    மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் எரிகா ஆன்ட்ரீவா 6-3, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் சீனாவின் யூ யுயானையும், பிரான்ஸ் வீராங்கனை டியானே பாரி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஜியு வாங்கையும் (சீனா), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மரியா லோர்டெஸ் கார்லியையும் (அர்ஜென்டினா), அசரென்கா 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டாரோதுப்ட்சேவாவை வீழ்த்தினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரர் ஹூம்பெர்ட் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பிரேசிலின் தியாகோ மான்டிரோவை தோற்கடித்தார்.

    • ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் சுமித் நாகல்- டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.
    • முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றினார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுமித் நாகல் நெதர்லாந்தை சேர்ந்த டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் 2 செட்டை டாலன் கிரீக்ஸ்பூர் எளிதாக கைப்பற்றி 6-1, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். 3-வது செட்டில் கடுமையாக போராடிய சுமித் நாகல் 6-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

    இறுதியில் டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். சுமித் நாகல் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் டென்மார்க் வீரர் ரூனே தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

    இதில் ரூனே 2-6, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிரசேவா உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவாவை 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    • பெகுலா, வோஸ்னியாக்கி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரும், 4 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) தொடக்க சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லி டி யூவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் ஒரு செட்டை இழந்து இருந்தார். அல்காரஸ் 2-வது சுற்றில் போடிக்வான்டே சேன்ட் குல்ப்புடன் (நெதர்லாந்து) மோதுகிறார்.

    உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த மெக்டொனால்டை 2-6, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக் கில் வென்றார். மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள மெட்வ தேவ் (ரஷியா), அர்தர் பைல்ஸ் (பிரான்ஸ்) உள் ளிட்ட வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    உலகின் 11-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோகினாகிஸ் 7-6 (7-5), 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 7-6 (8-6) என்ற கணக்கில் ரஷிய வீராங்கனை காமிலா ராக்சி மோவாவை தோற்கடித்தார். 4-ம் நிலை வீரார்களான ரைபகினா (கஜகஸ்தான்) 6-வது வரிசையில் இருக்கும் பெகுலா (அமெரிக்கா) வோஸ்னியாக்கி (டென் மார்க்) உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    ×