என் மலர்
நீங்கள் தேடியது "US Troops"
- கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல்
- ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது
மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17-ந்தேதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ந்தேதிக்கு பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
"தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன" என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.
- வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் ஐ.எஸ், அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன்:
மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்க ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா அமைப்புகளைச் சேர்ந்த 37 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்க 2001-ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டன. இந்த படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டு நேட்டோ படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டன.

தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களில் 14000 பேர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சியும், ஆலோசனைகளும் தாக்குதல்களுக்கு உதவியும் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய கள நிலவரத்தை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களில் பாதி பேரை திரும்ப பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக டிரம்ப் முடிவெடுத்தபோது ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளை திரும்ப பெறுவது குறித்தும் முடிவு எடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அநேகமாக கோடைக்காலத்தின்போது படைகள் திரும்ப பெறப்படலாம், ஆனால் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மற்றொரு அதிகாரி கூறியிருக்கிறார். #USTroopWithdrawal #Afghanistan
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
ஆனால், டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
டிரம்ப் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான டாம் துகண்ட்ஹாட் எம்பி தெரிவித்தார். அமெரிக்க படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது சிரியா மட்டுமின்றி ஈராக் அரசுக்கான ஆதரவையும் தொடருவதுதான் என்றும் டாம் கூறியுள்ளார். #SyriaConflict #USTroops #UK
வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்ததையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை. #SyriaConflict #SyriaISIS #USTroops