என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "USA visit"
- இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை.
- இந்தியா புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது.
உலகில் நான் எங்கு சென்றாலும் ஒவ்வொரு தலைவரும் புலம்பெயர்ந்த இந்தியர்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
இந்த 2024-ம் ஆண்டு முழு உலகிற்கும் முக்கியமானது. ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயகக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன.
இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் மனித வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தேர்தல். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் இந்த அளவைப் பார்க்கும்போது நாம் இன்னும் பெருமையாக உணர்கிறோம்.
நான் எனக்கென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் விதி என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது.
நான் முதலமைச்சராக வருவேன் என நினைக்கவில்லை. நான் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன். அதன்பின், மக்கள் என்னை பதவி உயர்த்தி பிரதமராக்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான்.
கோடிக்கணக்கான இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
இந்தியாவுக்காக சாக முடியாது, ஆனால், நாட்டிற்காக வாழலாம். சுயராஜ்ஜியத்துக்காக என்னால் என் உயிரைக் கொடுக்க முடியவில்லை, ஆனால் நல்லாட்சி மற்றும் வளமான இந்தியா ஆகியவற்றிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன என தெரிவித்தார்.
- பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது.
- எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ. என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஏஐ என்பது அமெரிக்கா-இந்தியாவை குறிக்கிறது.
இது உலகின் புதிய ஏஐ சக்தி. இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு எனது வணக்கம்.
நீங்கள் இந்தியாவை அமெரிக்காவையும், அமெரிக்காவை இந்தியாவையும் இணைத்துள்ளீர்கள்.
உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு போட்டி இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம்.
ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை.
பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம்.
பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையை வாழ்வது என்பது நம் நரம்புகளில் உள்ளது என தெரிவித்தார்.
#WATCH | US | In New York, PM Modi says, "For the world, AI means artificial intelligence, but for me, AI also means American-Indian spirit. This is the new 'AI' power of the world....I salute the Indian diaspora here." pic.twitter.com/ypuM4UjRvr
— ANI (@ANI) September 22, 2024
- குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார்.
- 22-ம் தேதி இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 22-ம் தேதி நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவித்துள்ளது.
- பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அமெரிக்காவில் தங்குகிறார்.
புதுடெல்லி:
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் அங்கு ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அரசுமுறைப் பயணம் செய்கிறார்.
இந்தப் பயணத்தின்போது ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை சந்திக்க உள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார்.
ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்