search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadaimalai"

    • அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன்.
    • நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன்.

    மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி தினம் நினைவுக்கு வரும். அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன். ஐம்புலன்களை வென்றவன். சூரியதேவனிடம் கல்வி கற்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன். வரபலம் உடையவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்;

    "ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி,

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்''

    • நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
    • ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகமும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் நாள்தோறும் காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறு வழக்கம். தொடர்ந்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகமும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டும் கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும். இதற்காக கட்டளைதாரர்கள் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்துகொள்வது வழக்கம். ஒரு நாள் அபிஷே கத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது தவிர வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், மலர் அங்கி, முத்தங்கி, மாலையில் தங்கத்தேர், சந்தனக்காப்பு, வெண்ணெய்க்காப்பு அலங்கா ரத்திற்கு தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

    வரும் 2024-ம் ஆண்டு வடைமலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்திற்கான முன்பதிவு வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி தொடங்க உள்ளது. சாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழுத்தொகையையும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுபோல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசம் ரூ.750, முத்தங்கி அலங்காரத்திற்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் செயல் அலுவலரும், இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.

    • ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
    • சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.

    புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.

    நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.

    ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.

    யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.

    நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.

    • கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாற்றப்பட்டது
    • அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு

    திருச்சி:திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை (23-ந்தேதி, வெள்ளிக்கிழமை) நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 10-வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. அதன் பின்னர் வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாற்றுதல் விழா காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.இந்த வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இங்கு வடை மாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.75 முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாங்கிரி மாலைக்கு ரூ.375-லிருந்து ரூ.15,000 வரை அதன் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதாகர், தக்கார் சுந்தரி, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×