search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikal"

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது.
    • அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தினசரி அன்னதானம் நடக்கிறது.

    குறிப்பாக சனிக்கிழமை அன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். அன்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி செல்வர்.

    இந்த நிலையில், இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    சாப்பிட்ட எச்சில் இலை மற்றும் மீதம் வைக்கப்பட்ட உணவு, பேப்பர் கப்புகள் அப்படியே தண்ணீரில் மிதந்து வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

    எனவே பாண்டமங்கலம் கோவிலில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் பகுதியில் உள்ள புத்தூர் வாய்க்காலில் ஏராளமாய் வெங்காய தாமரை செடிகள் மண்டியுள்ளது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

    அதனால் புத்தூர் வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறக்கூடிய கொ க்கேரி, உடையார்கோயில், புத்தூர் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள ஆயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது விவசாய நிலங்களை பாதுகாக்க உடனடியாக சாலியமங்களம் பகுதியில் புத்தூர் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×