search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi Visakha Festival"

    • இன்று முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினமான நாளை நடைபெறும் விசாக திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஒரு வருடம் அதாவது 12 மாதம், மாத கடைசியில் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் நாளை நடைபெறும் விசாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தவாறு உள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

    மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15மணிக்கு இராக் கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருவிழாவான நாளை (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக் கால அபிஷேகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக் கிழமை) வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • வைகாசி விழாவையொட்டி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை:

    சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விழாவையொட்டி மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.

    பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், நேற்று யானை புறப்பாடும் நடந்தது.

    இந்த நிலையில் பிரம் மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

    காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு ஒய்யாவி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வைகாசி விசாகமான 22-ந்தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபி ஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.

    வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன் பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    இதையொட்டி தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை செற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது.
    • விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    கோபி, ஜூன். 2-

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று 2-ந் தேதி நடை பெற்றது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 108 லிட்டர் பால்ஊற்றி தாராபிஷேக நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதை தொடர்ந்து 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் கோபி செட்டிபாளையம், கரட்டூர், நாயக்கன் காடு, நல்ல கவுண்டன் பாளையம், கரட்டடிபா ளையம்,

    குன்ன த்தூர் கெட்டி செவியூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    • 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
    • அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது.

    தாராபுரம்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது. தாராபுரத்தில் பழைய காவல் நிலைய வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது .

    நிகழ்ச்சிக்கு முன்பாக மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 லிட்டர் பாலினை தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தலையில் சுமந்து சோலை கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 12-ந் தேதி நடக்கிறது.
    • ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது
    • மாலை சந்தன காப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 66-வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி மாலை ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படு கிறது. தொடர்ந்து 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைகிறது.

    இதை தொடர்ந்து முருகன் கோவிலில் அன்று காலை கணபதி ேஹாமத்து டன் தொடங்கி கலசஸ்தா பனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது. மதியம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    விழாவை யொட்டி வரும் 12-ந் தேதி காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×