என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » van cleaner
நீங்கள் தேடியது "van cleaner"
- ராமநாதபுரம் மாவட்ட செய்தி-மக்கள்தொடர் துறையில் 2 வேன் கிளீனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 119 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள்தொடர் துறையில் 2 வாகன சீராளர் பணியிடம் காலியாக உள்ளது.
ஆண், பெண் இருபாலர் என மொத்தம் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்று எஸ்.சி., (முன்னுரிமையற்றவர்) 18 முதல் 37 வயதும், பி.சி., (முன்னுரிமை பெற்றவர்) 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேர்முகதேர்வு நடந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர்.
பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி, ஆதார் அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
எம்.எஸ்.சி., பி.இ., மெக்கானிக் படித்த டிப்ளமோ, பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர்.
ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் டிரைவர் பலியானார். மாணவ, மாணவிகள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராசிபுரம்:
ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் ராசி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் இருந்து மாணவ - மாணவிகளை அழைத்து வருவதற்காக வேன் வசதி உள்ளது.
இன்று காலை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றி வருவதற்காக வேன் சென்றது. அந்த வேனை பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் கிளீனராக சதீஷ்குமார் (28) என்பவர் இருந்தார்.
இந்த வேன் இன்று காலை 34 பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக் கணவாய் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
உடனே வேனில் இருந்த மாணவ - மாணவிகள் கதறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ - மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் கிளீனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மகரிஷி, ஹேமரஞ்சினி, ஹர்சினி ஆகிய 3 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். #tamilnews

×

X