என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "van hit"
- தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
- பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது.
விழுப்புரம்:
ராணிப்பேட்டை மாவட்டம் லப்பை பேட்டையைச் சேர்ந்தவர் கணபதி (55) விவசாயி. இவர் விழுப்புரம் மாவ ட்டம் மேல்மலையனூர் அருகே பெரிய நொளம்பை கிராமத்தில் உள்ள தன் மருமகன் வீட்டிற்கு வந்து விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்வ தற்காக ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
சஞ்சீவிராயன்பேட்டை அருகில் சென்ற போது ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ள்ளார். இதனால் பின்னால் வந்த வேன் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கணபதி, சேத்துப் பட்டைச் சேர்ந்த மார்ட்டீன், நத்தமேட்டைச் சேர்ந்த சண்முகம் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணபதி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரி ன்பேரில் அவலூ ர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியா புரத்தைச் சேர்ந்தவர் பரமன் (வயது38), கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் புறப்பட்டார்.
சங்கரன்கோவில் சாலையில் முதுகுடி விலக்கு பகுதியில் பரமன் வந்தபோது எதிரே மினிலாரி வந்தது. மதுரையில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவில் சென்ற அந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அதே வேகத்தில் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மினிலாரி மோதியது. இந்த விபத்தில் பரமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஆம்புலன்சு வருவதற்குள் பரமன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் காயம் அடைந்தவர்கள் சாலை போடும் பணி சூப்பர்வைசர் ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (44), விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி மணி (24) என தெரியவந்தது.
விபத்துக்கு காரணமான மினி லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆம்புலன்சு தாமதமாக வந்ததால் தான் பரமன் இறந்து விட்டார் என கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.
கோபி:
கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.
இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.
இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்