என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VAOs"
- மேலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வி.ஏ.ஓ.க்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
மேலூர்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மேலூர் தாலுகா அளவிலான வி.ஏ.ஓ.க்கள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.
- கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
- அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும்.
திருப்பூர்:
கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் கட்டாயம் இருக்க வேண்டுமென வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வி.ஏ.ஓ.,க்கள், நில வருவாய் ஆய்வாளர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் பணி நாட்களில், மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை தகவல் பலகையில் எழுதி வைத்து செல்ல வேண்டும்.கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தாசில்தார்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பான அவருடைய பேச்சு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-
கிசான் யோஜனா திட்டத்தில் (பிரதமர் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த திட்டம்) பயன்பெற 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் நீங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு அவர் அலுவலகத்தில் இல்லை என்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லோரும் அவர்கள் பணியாற்றக்கூடிய கிராமத்தில் இருந்துதான் விண்ணப்பங்களை வாங்க வேண்டும். அதிக வயதானவர்கள் என்னை தேடி வந்து மனு கொடுக்கிறார்கள். அந்த விண்ணப்பத்தில் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து உள்ளனர்.
ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர் மனுவை வாங்காமல் விட்டு உள்ளார். அவர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இங்கு வந்து உள்ளார். அந்த அம்மாவுக்கு 80 வயது இருக்கும். உங்களுக்கு இந்த சின்ன வேலையை கூட செய்ய முடியவில்லை என்றால் என்ன வேலை செய்வீர்கள்.
எல்லா கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து களப்பணியாற்ற வேண்டும். காலையில் இருந்து இரவு வரை விண்ணப்பங்கள் வாங்க வேண்டும்.
நீங்கள் முழுமையாக விண்ணப்பங்கள் வாங்காமல், நான் எப்படி இந்த விவரத்தை அனுப்புவது, எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்று, கிராம நிர்வாக அலுவலர் சரியாக வேலை பார்த்து இருந்தால் அந்த அம்மா இங்கே வந்து இருக்க வேண்டாம். அந்த அம்மா வீட்டிலேயே தான் இருக்கிறார்.
வீட்டுக்கு சென்று விண்ணப்பம் வாங்காமல் எப்படி எனக்கு அறிக்கை கொடுக்கிறீர்கள். நான் எந்த நேரத்திலும், எந்த கிராமத்திற்கும் விசாரணைக்கு வருவேன். அந்த கிராமம் பற்றிய முழுவிவரத்துடன், கிராம நிர்வாக அலுவலர் இருக்க வேண்டும்.
அந்த கிராமத்தில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். கிராம நிர்வாக அலுவலர் எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்ற பட்டியலுடன் இருக்க வேண்டும்.
யார், யாரை சென்று பார்த்து உள்ளீர்கள் என்ற விவரமும் இருக்க வேண்டும். நான் போய் பார்க்கும்போது யார் எல்லாம் ஊரில் இல்லையோ, யாரிடம் எல்லாம் பட்டியல் இல்லையோ, அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த தகவலை தாசில்தார்கள், உங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவித்து விடுங்கள்.
இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.
கலெக்டரின் இந்த கண்டிப்பான பேச்சுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக அமைப்புகளும் கலெக்டரின் பேச்சை வரவேற்றுள்ளன. #Shilpaprabhakar #VAO
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் பத்து தினங்களுக்கு மேலாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் மேற்கொண்டு இருப்பதால், புயல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற பணிகளும், நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Mutharasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்