search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Accident"

    • விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
    • விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதியது.

    அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் விபத்தில் சிக்கியிருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உடையந்த அள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53). மற்றும் பயணிகள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த பயணிகள் 9 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் 8 பேர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அரசு பஸ் ஆகியவற்றை மீட்கும்பணி 30 நிமிடத்திற்கு மேலாக நடந்தது. அதற்கு பிறகு போக்குவரத்து சீரானது. விரிஞ்சிபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கட்டிட பணிக்கு கம்பி வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா. தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

    தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்பூண்டி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    பைக்கில் வேகமாக வந்த கார்த்தி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதினார். இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெட்டபட்டு பகுதியை சேர்ந்தவர் அரிஷ் (வயது 23). இவரது நண்பர்கள் அன்பு (27). நவீன் (26). இவர்கள் 3 பேரும் நேற்று நாட்டறம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    எல்லபல்லி என்ற இடத்தில் பைக் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்டு 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரிஷ் இறந்தார். அன்பு, நவீன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தகவலறிந்த உறவினர்கள் கார் டிரைவரை கைது செய்ய கோரி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி முரளி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் கத்தாரி பகுதியை சேர்ந்த கரியன் என்பரை கைது செய்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #VelloreAccident #ChennaiAccident #CarTruckAccident
    வாலாஜா:

    வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சென்னையைச் சேர்ந்த இவர்கள் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.

    சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பனையூர் கும்மிடிகான் தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 40). சோழிங்கநல்லூர் மீன்மார்க்கெட்டில் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இறந்துவிட்டார். அவருடைய காரிய நிகழ்ச்சிக்காக சாதிக் அலி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் ஆரணிக்கு சென்றிருந்தார். காரியம் முடிந்ததும் மாலையில் அனைவரும் ஊருக்கு திரும்பினர். காரை சாதிக் அலி ஓட்டி உள்ளார்.



    நேற்று இரவு 7 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியை தாண்டி வன்னிவேடு ஊராட்சி பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று தேசியநெடுஞ்சாலைக்கு வந்து எதிர்திசையில் திரும்பியது.

    இதை பார்த்ததும் சாதிக் அலி காரை நிறுத்த முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர்.

    ஆனால் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருந்ததால் மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து வாலாஜா போலீஸ் நிலையம் மற்றும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

    காருக்குள் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே இருந்த இடத்திலேயே பிணமாக கிடந்தனர். 6 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் சாதிக் அலி, அவருடைய மனைவி பர்வீன் (35), மகன் மகபூப்பாஷா (15), சாதிக் அலியின் தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமாபீ (65) மற்றும் பர்வீனின் உறவினர் அகமதுபாஷா (60) என்பது தெரியவந்தது. 6 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    வேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமதுதன்வீர் டிரைவர் ஓட்டிச் சென்றார். வேலூர் அடுத்த மோட்டூர் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூரில் நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கொசபேட்டை கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர் வெங்காயமண்டியில் வேலை பார்த்து வந்தார்.

    கமலக்கண்ணன் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு பெரியார் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கமலக்கண்ணன் மீது மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் இறந்தார்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×