search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vessel workers"

    • பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது.
    • அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா், அனுப்பா்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திர தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை முடிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி 1 ந் தேதி முதல் 2025 ம்ஆண்டு டிசம்பா் 31 ந் தேதி வரையில் எவா்சில்வா், பித்தளை, செம்பு பாத்திரத் தொழிலாளா்களுக்கு கொடுக்கப்படவேண்டிய கூலி உயா்வு விவரங்களை வெளியிடும் சிறப்பு மகாசபைக் கூட்டம் நாளை 2-ந்தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    அனுப்பா்பாளையம் காமாட்சியம்மன் பாத்திரத் தொழிலாளா் சங்க கட்டட வளாகத்தில் நடைபெறும் மகாசபைக் கூட்டத்தில் அனைத்து தொழிலாளா்களும் பங்கேற்க வேண்டும் என்று பாத்திரத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. 

    • எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது.
    • 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாக எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரிடைேய பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் நலிவடைந்து இருப்பதால் அடுத்த ஒரு ஆண்டிற்கு பழைய கூலியே வழங்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால் இதை ஏற்காத கூட்டு கமிட்டி சார்பில் பழைய கூலி உயர்வான எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் தரப்பில் 10 சதவீதமும், பித்தளை தரப்பில் 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முன் வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்கக்கோரி நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர உற்பத்தியாளர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி அறிவித்துள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு வேண்டும் என்றும் கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

    • பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை எவர்சில்வர் மற்றும் பித்தளை, செம்பு உற்பத்தியாளர் தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் சதவீதம் கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறி பாத்திர உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான முழுவிவரங்களையும் பாத்திர தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளக்கக்கூட்டம் அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கலந்து கொண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வாழ்த்தி பேசினார். மேலும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் இல்லாமலேயே தொழிற்சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி போதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் இன்று (சனிக்கிழமை) எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களுடனும், வரும் திங்கட்கிழமை பித்தளை, செம்பு உற்பத்தியாளர்களுடனும், வரும் செவ்வாய்கிழமை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அறிவித்தது.இந்த கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இத்தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.கடந்த முறை 2019 டிசம்பர் மாதம் 31ந் தேதி சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் வருகிற டிசம்பர் 31ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    கடந்த முறை எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 21 சதவீதம், பித்தளை பாத்திரங்களுக்கு 30 சதவீதம், ஈய பூச்சு பாத்திரங்களுக்கு 37 சதவீதம், செம்பு பாத்திரங்களுக்கு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சி.ஐ.டி.யு., பாத்திர சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க செயலாளர் குப்புசாமி, தலைமையில் நடந்தது.ஒரு வாரத்தில் அனைத்து கட்சி பாத்திர தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, அதில் சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, அதை தொடர்ந்து பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    ×