என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "video conference"
- தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி திறப்பு விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தி.மு.க. அமைப்பாளர் அமிதாப், கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் வனஜா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மானூரில் புதிதாக அமைய உள்ள இந்த அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிக்கு மதவக்குறிச்சி ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
அதுவரையிலும் தற்காலி–கமாக மேலப்பிள்ளையார்குளம் பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகிறது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் 288 மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் மானூரில் 2-வதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர்.
இந்தநிலையில் இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அங்கு புதிதாக வைர வியாபாரம் செய்வதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.
ஏற்கனவே இவரை நாடுகடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
நிரவ் மோடியை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்கும்படி லண்டன் கோர்ட்டில் இந்தியா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
அப்போது அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார். மாறாக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ்மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #UKCourt
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமிஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்