என் மலர்
நீங்கள் தேடியது "viduthalai siruthaigal party"
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநில துணை செயலாளர் ஜான்சன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன், ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் வீரபாபு, வரதராஜன், இடிமுரசு, சேகர், கண்ணன், வேல் முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மாநாட்டில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அதனை அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட பொருளாளர் நேரு, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் தலித் மக்கள் முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 50 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதும் டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் ஒரு காரில் திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பஞ்சாட்சரம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வ தொண்டர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் துப்பாக்கி சூட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறியல் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் ரபீக், நிர்வாகிகள் கனகராஜ், சுசிதமிழ்பாண்டி, மணிபாரதி, ஜோதிமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.#tamilnews
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.
குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.
இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.
யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.
அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan #thirumavalavan
அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், பொருளாளர் முகம்மது யூசுப், ஆளுர் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘அம்பேத்கர் சுடர்’ விருது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை கேரள மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் பெற்றுக்கொண்டார். ‘காமராஜர் கதிர்’ விருது தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசருக்கும், ‘பெரியார் ஒளி’ விருது ஆந்திராவை சேர்ந்த கத்தாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை’ விருது வைகறை வெளிச்சம் ஆசிரியர் மு.குலாம் முகமதுவுக்கும், ‘செம்மொழி ஞாயிறு’ விருது வா.மு.சேதுராமனுக்கும் வழங்கப்பட்டது.
‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த, மறைந்த அ.சேப்பனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை அவருடைய மகன் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். விருதுகளுடன் செப்பு தகடில் பட்டயமும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
விருதுகளை வழங்கி தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட மதசார்பற்ற சக்திகளை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைக்க தவறியதே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.
தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைக்கும் இந்த இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்னரே இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், பா.ஜ.க.வை அதிக இடங்களில் வெற்றி பெறவிடாமல் தடுத்திருக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சி முயற்சி எடுக்க தவறினால் கர்நாடகா நிலைமைதான் ஏற்படும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. அதனால் தான் பா.ஜ.க. மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்தால் ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற முடியாது.
எனவே ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் மாநாடு நடத்த முடிவெடுத்து உள்ளோம். அந்த மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். தி.மு.க., தெலுங்குதேசம், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு போராடும் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசத்தை காத்திட முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது பெற்ற திருநாவுக்கரசர் பேசியதாவது:-
“வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட பன்முகத்தன்மையை இந்தியாவுக்கு அம்பேத்கரை தவிர வேறு எவராலும் சிறப்பு மிக்க அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியிருக்க முடியாது.
ஆனால் தற்போது நாட்டில் உள்ள பன்மைத்துவம் மறைந்து வருகிறது. இதை மீட்க ஒருமித்த கருத்துடன் மதசார் பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். 3-வது அணி என்பது அமைவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.
விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம். ஆரூண், விஸ்வநாதன், சிரஞ்சீவி, ஜான்சிராணி, ஹசன் அலி ஜின்னா, ராஜசேகர், வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகள் பாவரசு, உஞ்சை அரசன், எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, பாலசிங்கம், பாவலன், பார்வேந்தன், தகடூர் தமிழ் செல்வன், பெரம்பலூர் இரா.கிட்டு, திராவிட மணி.
மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், செல்லத்துரை, ரவிசங்கர், இரா.செல்வம், அம்பேத்வளவன், அன்பு செழியன், செழியன் மற்றும் பொன்னி வளவன், வீர.ராஜேந்திரன், வக்கீல்கள் விஸ்வநாதன், தாமரை, நீதி வள்ளல், அகரன், குமரப்பா, ஸ்ரீதர் சு.கார்த்திக், அசோக், இளையா, கோ.சீராளன், அ.பேரறிவாளன், லியோ, சிவ.பேரறிவாளன், கதிர் காமம், பிளாரன்ஸ், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #thirunavukarasar