என் மலர்
நீங்கள் தேடியது "vigil"
- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாரமங்கலம்:
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் அமலா, வட்டார மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் தேர்நிலையம், அண்ணாசிலை, பஸ் நிலையம் வழியாக சென்று கைலாசநாதர் கோவில் அருகில் நிறைவு பெற்றது.
ஊர்வலத்தில் பதாகை கையில் ஏந்தியபடி "சேர்ப்போம் சேர்ப்போம் மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்ப்போம் "கொடுப்போம் கொடுப்போம் சம வாய்ப்பு கொடுப்போம் " ஆதரிப்போம் ஆதரிப்போம் மாற்றுத் திறனாளிகளை ஆதரிப்போம் " என்று கோசங்களை எழுப்பினர்.
ஊர்வலத்தில் மாற்று திறனாளிகளின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,வட்டார ஆசிரிய பயிற்றுனர்கள்,முட நீக்கு வல்லுநர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு ஆசிரிய பயிற்றுனர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
- பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
- நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின்படி புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் பொங்கல் விழா
நடைபெற்றது. சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம் உத்திர வின்படி, நாமக்கல் கலெக்டர்
ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின்படி புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக வெங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சித் தலை
வர் விஜி(என்கிற) விஜயகு மார் தலைமையில் செயல் அலுவலர் சீனிவாசன், துணைத் தலைவர் ரவீந்தர் ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்களுடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பாண்ட மங்கலம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு, பேரூராட்சித் தலை வர் சோமசேகர் தலைமை யில், செயல் அலுவலர் திலகராஜ், துணைத் தலை வர் பெருமாள் என்கிற முருக
வேல் ஆகியோர் முன்னிலை
யில் பேரூராட்சி பணியா ளர்கள், தூய்மை பணியா ளர்கள் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்களுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
- குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும்,
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
சேலம்:
சேலம், ஏற்காடு அடிவாரத்திலிருந்து ஏற்காடு செல்லும் பகுதியில் உள்ளது கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி.
இந்த ஊராட்சியை குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும், வீதிகளிலும், பொது இடங்களிலும் குப்பை என்பதே இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அருள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் ஆ.பிரபு, கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தாளாளர் மீனா சேது, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜா, ஆறுமுகம், ஜி.கே.மணி, செட்டிசாவடி கோவிந்தராஜ், பூவரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்து மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தாரமங்கலம் பவளத்தானுர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரத்த சோகையின் அறிகுறிகள், ரத்தசோகை தடுப்புமுறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அடிப்படை உண்மைகள், ஊட்டச்சத்து உணவு ஏன் அவசியம்? சக்தி தரும் உணவுகள், தானிய வகைகள், கிழங்கு வகைகள், நுண்ணுட்ட சத்து நிறைந்துள்ள உணவுகள் குறித்த விழிப்புணர்வு விளக்க பிரசார நோட்டீஸ் வழங்கினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் வளர் பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் யசோதா, 2-ம் நிலை மேற்பார்வையாளர் தனலட்சுமி, வட்டார திட்ட உதவியாளர் ரமேஷ் மற்றும் அங்கன்வாடி பணியாளர்–கள், உதவியாளர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர் .
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக்கின் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- இந்த ஊர்வலத்தில் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூ ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதன் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மணி தலைமை வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கண்காட்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் பொதுமக்கள் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது என தனித்தனியாக வகைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் ரமேஷ், ராமச்சந்திரன், நாச்சிமுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் ரவி, மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.