என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayvasant MP"

    • மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா.
    • சமூக நலக் கூட திட்டத்தை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

    அஞ்சுகிராமம், மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.


    இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மற்றும் ஆராதனையில் பக்தர்களுடன் பங்கேற்றார்.


    மேலும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் புதிய சமூக நலக் கூடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கூடம் அமைக்கும் பூமி பூஜை விழாவிலும் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    • சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
    • தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.

    கன்னியாகுமமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் மாதரசி அன்னை சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.

    இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளுக்காகவும் அவர் முன்வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.

    காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
    • சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பை தடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2024-ம் ஆண்டு 350 மீனவர்கள், 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது.
    • இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணவேண்டும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோர வேண்டும்.

    இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அவர்களை சிறை பிடித்து அவர்களது உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது.

    2024-ம் ஆண்டு மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று.

    1974-ம் ஆண்டு இந்திய இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2 அரசுகளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைத்து தீர்வு காண முன்வர வேண்டும்.

    இலங்கை அரசு உடனடியாக அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதனை இலங்கை அதிபருக்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.
    • இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்துவர்களுக்கு நன்றி.

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி.விஜய்வசந்த் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலைநிறுத்தவும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறுகிறது.

    7ஆம் தேதி பொதுக் கூட்டத்துடன் குமரியில் ஆரம்பித்த பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய சர்வதேச அளவில் நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி.உதயம், டாக்டர் பினுலால் சிங், நவீன் குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் எனதருமை தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 


     மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த காவல்துறை அதிகாரிகள், காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர, பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது நன்றி.

    பொதுமக்களுக்கு மிக முக்கியமாக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பெருந்திரளாக கூடி தலைவர் ராகுல் காந்தி அவர்களை அன்புடன் வரவேற்ற குமரி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    ×