என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vilathikulam"

    • வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா
    • 3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மரங்கள் மக்கள் இயக்கநிர்வாக அதிகாரி ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன. அப்போது விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பிரம்மனை ஆக்கக்கூடிய கடவுள் என்றும், விஷ்ணுவை காக்கக்கூடிய கடவுள் என்றும், சிவனை அளிக்கக்கூடிய கடவுள் என்றும் கூறுவார்கள்.

    ஆக்குவதை விட பாதுகாக்கக் கூடிய கடவுள் விஷ்ணுவுக்கு தான் மரியாதை அதிகம் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுச் சொன்னார்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரியும் சிவனும் ஒன்று என நம்பக் கூடியவர்கள். அந்த அடிப்படையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்துவிட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மரங்கள்‍, சுற்றுப்புற சூழலை அழிப்பதற்கு ஏராள மானோர் உள்ளனர்.


    மத நல்லிணக்கத்தை மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். அழிக்கக்கூடிய சக்திகளை எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    சாதி மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள கூடிய மொழியாக உள்ளது. அதனால் முதலில் அவர்கள் தமிழ் பேசட்டும். நாம் அதுக்கு அப்புறம் யோசிக்க லாம். தமிழ் அழகான மொழி,

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • ராமச்சந்திராபுரத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நியாய விலை கடையை புதுப்பித்து புதியக்கட்டிடம் அமைப்பதற்கும், பழுதடைந்த நிலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தினை பார்வையிட்டு புதிய கூட்டுறவு சங்க கட்டிடம் அமைப்பதற்கும், வாறுகால் பாலம் அமைப்பதற்கும், கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வருவாய் ஆய்வாளர் மாடசாமி, மின் வாரிய உதவி பொறியாளர் செல்வகுமார், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் யுவராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கூட்டுறவு சங்க தலைவர் நவநீதகண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றாங்கரை கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை கிராமத்தில் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அரசின் சார்பில் கிராமத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கணவர் இல்லாத வயது முதிர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, மகளிர் திட்ட மேலாளர் அருள்செல்வி, வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் பிச்சை, சிங்கராஜ், கருப்பசாமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் லயன் தெருவில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தி மாலையோடு சேர்ந்து பண மாலையும் பக்தர்கள் அணிவித்தனர்

    விளாத்திகுளம்:

    தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லயன் தெருவில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால் அபிஷேகம், அன்னாபிஷேகம், மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து அன்னைக்கு பக்தர்களால் கொண்டுவரப்பட்ட தேன் கலந்த மாதுளம் பழம் மற்றும் அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தி மாலையோடு சேர்ந்து பண மாலையும் பக்தர்கள் அணிவித்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னையின் பிரசாதமும், அம்பாள் புகைப்படமும் வழங்கப்பட்டது.

    • பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி பொறியாளர் தமிம்அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்தியஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர் பரமசிவம், கருப்பசாமி, முனியசாமி , வார்டு செயலாளர் மாரிராஜ், வார்டு கவுன்சிலர் செல்வகுமார் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் முதல்முறையாக ரூ. 11 லட்சம் மதிப்பிலான 12 பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • விழாவில் சுமிந்தர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரபேல் தலைமை தாங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் சுமிந்தர் இந்தியா நிறுவனம் மற்றும் மதுரை கலசம் நிறுவனம் சார்பில் இயற்கை முறையில் மிளகாய் தோட்டப்பயிர் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் விவசாய நிலத்தின் தன்மை, பயிர்களின் வளர்ச்சி, நீர் தேவை, அன்றைய வானிலை, பயிர்களுக்கு தேவையான உரம் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வடிவில் முன்கூட்டியே துல்லியமான தகவல்களை வழங்கும் ரூ. 11 லட்சம் மதிப்பிலான 12 பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் தமிழகத்தில் முதல்முறையாக மிளகாய் தோட்டம் உற்பத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    குருவார்பட்டி கிராமத்தில் வைத்து நடந்த பசல் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் அறிமுக விழாவில் சுமிந்தர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரபேல் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் வேளாண் விரிவாக்கம் மைய அதிகாரிகள் அருள்பரத், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஜஸ்வின், டேவிட், ராஜசேகர், லட்சுமணன், ஹரிசுக்லா, லூகஸ் நிறுவன அதிகாரிகள் லட்சுமி, வருண், கலசம் நிறுவன அதிகாரிகள் தவமணி, சுரேஷ், சுதாகர், விவசாய பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது.
    • 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நாய் குரைத்துள்ளது.

    இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர்.

    • புதூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமையி லான மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோ தனை ஆகியவை நடத்தப்பட்டு, மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், பச்சைமலை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, புதூர் ஊராட்சி ஒன்றியம், மாதலபுரம் கிராமத்தில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளையும், வாதலக்கரை கிராமத்தில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலக் கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர், விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, அருமைநாயகம் ஆகியோர் குடும்பங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறி, 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.

    • விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
    • புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விளாத்திகுளம்:

    புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் சின்னகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தங்கள் வங்கி கணக்கில் பெற்று வரும் விவசாயிகள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டியது அவசியம். தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், ஏற்கெனவே பதிவு செய்த செல்போன் எண் எடுத்துச் சென்று அங்கிகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் இ.கே.ஒய்.சி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.

    விவசாயிகளுக்கு 13-வது தவணை டிசம்பர் மாதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் டிசம்பர் முதல் வாரத்திற்குள் விவசாயிகள் தங்களது பதிவினை புதுப்பித்தல் அவசியம்.மேலும் விவரங்களுக்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில்நாராயண மூர்த்தி, குறிஞ்சி ராம்குமார், பிரியா முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மினி மராத்தான் போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா பெற்றார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் வைத்து ஆண்களுக்கு 16 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ. என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

    பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூ. 14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை அதே பள்ளியை சேர்ந்த முகேஷ், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • வெளியே செல்லும் குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் உணவுக்காக குரங்குகள் விரட்டி வருகிறது

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு பகுதி யில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்தும் மேலும் கொய்யா, சப்போட்டா காய்கறி செடிகளை சேதப்படுத்தியும் வாசல்கள், ஜன்னல்கள் வழியாக வீடுகளில் நுழைந்து மளிகை சாமான்கள், காய்கறிகளை எடுத்துச் சென்றுவிடுகிறது.

    இதனால் சிறிய குழந்தைகள் வெளியில் நடமாட முடியாமல் சிரமப்பட்ட வருகின்றனர்.வெளியே செல்லும் குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் உணவுக்காக குரங்குகள் விரட்டி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்பட்டு சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குரங்கின் சேட்டை தாங்காமல் பகல் வேளையில் கதவுகளை திறக்காமல் வீட்டில் உள்ளேயே இருக்கின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    ×