search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே  பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை
    X

    சாலை அமைக்கும் பணியினை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    விளாத்திகுளம் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • ராமச்சந்திராபுரத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நியாய விலை கடையை புதுப்பித்து புதியக்கட்டிடம் அமைப்பதற்கும், பழுதடைந்த நிலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தினை பார்வையிட்டு புதிய கூட்டுறவு சங்க கட்டிடம் அமைப்பதற்கும், வாறுகால் பாலம் அமைப்பதற்கும், கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வருவாய் ஆய்வாளர் மாடசாமி, மின் வாரிய உதவி பொறியாளர் செல்வகுமார், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் யுவராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கூட்டுறவு சங்க தலைவர் நவநீதகண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×