search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village People's Petition"

    • குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் அளித்தனர்
    • நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரி உறுதி

    குடியாத்தம்:

    குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமாலையை அடுத்த கணகர் குட்டை பகுதியிலும், பிள்ளை யார் கோவில் அருகிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பட்டா வழங்கிய இடத்தை அளந்து உட் பிரிவு செய்து கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    மேலும் கணகர்குட்டையில் வழங்கப்பட்ட மனைகளில் வீடு கட்டாததால், அந்த இடத்தை வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ராமாலை ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவல கத்தில் துணை தாசில்தார் ரமேஷிடம், பட்டா வழங்கிய இடத்தை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.

    • நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் பழமையான மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் வரி வசூல் செய்து சிறியதாக கோவில் கட்டி வழிபட்டு வந்தோம்.அதனைத் தொடர்ந்து கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை வசூல் செய்யப்பட்டது.

    இதனை தங்கராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். ஆனால் அவரது வரவு, செலவு கணக்கில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பேசுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

    ஊர் திருவிழா நடைபெறும் போது வரி வசூல் செய்வது தொடர்பாக ஒவ்வொரு வருடமும் பிரச்சினை செய்து வருகிறார். மேலும் எரியோடு போலீஸ் நிலையத்தில் அவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு தெரிந்த சிலரது செல்வாக்கை பயன்படுத்தி பொதுகமக்களை மிரட்டி வருகிறார். எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×