என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Virus Fever"
- வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
- சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.
- காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 என்னும் ஒருவகை இன்புளூயென்சா வைரஸ் கிருமி தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விற்பனை கடந்த மாதம் உயர்ந்த நிலையில், எழுச்சி தொடர்கிறது.
"கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.
"காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது."
பிப்ரவரி மாதத்தில் நோய் தொற்று எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.22,883 கோடியாக இருந்தது.
சுவாச மருந்துகள் கடந்த மாதம் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.14,880 கோடியாக இருந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய மருந்துகள் விற்பனை 26.1 சதவீதம் அதிகரித்து ரூ.2,766 கோடியாக உள்ளது. நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கப் பயன்படும் சிப்லாவின் புட்கார்ட் 23.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,385 கோடியாகவும், வலி நிவாரணியான வலி நிவாரணி மருந்துகள் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,898 கோடியாகவும் இருந்தது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைரஸ் காய்ச்சல் அல்லது இன்புளுயென்சா ஏ அதிகரித்து வருகிறது.
இன்புளுயென்சா ஏ இன் எச் 3 என் 2 பரவல் காரணமாக மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலருக்கு உலர் ஹேக்கிங் இருமல் உள்ளது, மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்ட நாட்கள் மற்றும் வாரங்களுக்குப் பிறகு தொடர்ந்து இருமல் உள்ளது. நோய் பாதிப்பை மக்கள் புறக்கணிக்கக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கு நெபுலைசர்கள், இன்ஹேலர்கள், மூச்சுக்குழாய்கள் மற்றும் சில நேரங்களில் குறுகிய ஸ்டீராய்டு படிப்புகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.
குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு தொற்று மார்பில் இறங்கி நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், புற்றுநோய், நீரிழிவு நோய் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
இதயம் அல்லது நுரையீரல் பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை இந்த நோய் தாக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட கூடியவர்கள்.
மக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும், கை மற்றும் சுவாச சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகளை எடுக்க வேண்டும்.
உட்புற காற்றின் தரத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் மற்றும் ஆலோசனையின்றி வீட்டு வைத்தியத்தைத் தவிர்க்க வேண்டும்.
புளூ காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுவாக கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நன்கு சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிடலாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
- மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர்:
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ல் மெகா மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.
பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.
- ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
- காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை.
சென்னை:
பள்ளிகள் திறந்து 2 வாரம் ஆகிவிட்டது. ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் பலர் காய்ச்சல், சளி, தொண்டை வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெற்றோர்களும் பயத்தின் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்தார்கள். கொரோனாவுக்கும் காய்ச்சல்தான் அறிகுறி என்று கூறப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதும் பெற்றோர்கள் பீதி அடைகிறார்கள். பலர் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இதுபற்றி கூறும்போது, 'பீதி அடைய தேவையில்லை. இது சாதாரணமான வைரஸ் காய்ச்சல் தான். தொண்டை வலி, இருமல், சளி எல்லாம் இதனால் ஏற்படுவது தான்.
சிலருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தியும் இருக்கிறது. இது சீசன் காய்ச்சல். செப்டம்பர் முதல் ஜனவரி மாதங்களுக்கு இடையிலான காலகட்டங்களில் அதிகமாக இருக்கும். இப்போது முன்கூட்டியே வந்துள்ளது. அவ்வப்போது லேசான மழை, அதிகமான வெயில் போன்ற காரணங்களால் இவை உருவாகலாம்.
ஒன்றிரண்டு நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களிடம் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது. அதுவும் பயப்பட தேவை இல்லை.
3 அல்லது 4 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையாமல் இருப்பது, உடல் சோர்ந்து போவது, மூச்சு விட சிரமம், மிக குறைந்த அளவே சாப்பிடுவது, வாந்தி தொடர்ந்து இருப்பது போன்றவை காணப்பட்டால் மருத்துவரை அணுகினால் போதும்.
முக கவசம் அணிவது, இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது, வீட்டு உணவுகளையே சாப்பிடுவது, காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்