என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virus"

    • நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    77 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்த நிலையில், நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனும–திக்–கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், கொரோனா–வுக்கு சிகிச்சை பெற்று வந்த 53 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்–பட்டனர். மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு 520 பேர் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 26 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்–பட்டவர்களின் எண்ணிக்கை 68,517 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 67,789 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 194 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனும–திக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    • மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

    கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.

    சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.

    மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கேரளாவில் நிபா வைரஸ் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. #Shigella #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

    லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்திற்கு மத்தியில் இப்போது கேரளாவை பெரும் அச்சுறுத்தும் வகையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு நேரிட்டுள்ளது. 

    குழந்தைகளை வேகமாகத் தாக்கும் ஷிகெல்லா என்ற புதிய பாக்டீரியா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளது. 

    கடந்த ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்பு தொடர்பான எச்சரிக்கையான விடுக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த தொற்று பாதிப்பு காரணமாக மூவர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், ஜியான் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    சுத்தமில்லாத உணவு, தண்ணீர் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

    பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படும். கைகளை சுத்தமாக கழுவாவிட்டால், இந்த நோய் எளிதாக பிறருக்கும் தொற்றிக் கொள்ளும் என்பதால், எப்போதும் சுத்தமாக இருப்பதுடன், குழந்தைகளிடம் கைகளை கழுவச்சொல்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    பாக்டீரியா பாதிப்பு நேரிட்டு ஒருவார காலம் வழக்கமாக இருக்கும், பின்னர் வயிற்று வலி போன்ற பாதிப்பு நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ பேசுகையில், ‘ஷிகெல்லா’ வயிற்றுப்போக்கு நோய் மற்றும் மிகவும் தொற்றுக்கூடியது, குறிப்பாக 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தாக்கும் என கூறியுள்ளார். உணவுப்பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

    இதற்கிடையே தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் உணவுகள் மூலமாகவே இந்த பாக்டீரியாவின் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

    ஏற்கனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 17 பேர் உயிரிழந்தனர், இந்த வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற கேரளாவிற்கு மீண்டும் ஒரு சோதனை காலமாக மாறியுள்ளது. இப்போது ‘ஷிகெல்லா’ பாக்டீரியா அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
    ×