என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VK Singh"
- ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
- ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.
தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்.
- இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே 22 அன்று ஹரியானா மாநிலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம். இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், "ராகுல்காந்தி முதலில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றிவிட்டு, பிறகு அக்னிபாத் திட்டம் குறித்து பேசட்டும் என்று விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் மத்திய இணை மந்திரி வி.கே. சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கடந்த 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரியில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது.
இந்தியா பொருளாதார வளர்ச்சி, அரசியல் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014-ல் இருந்ததைவிட இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2015-ல் 428 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த 9 ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகிறது.
80 கோடி பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ விதம் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவ தில்லை. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்.
ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் அமைப்புகளாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டும் தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது, பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் தயா சங்கர் உடன் இருந்தார்.
- வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஓச்சம்பட்டியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்துகொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். இத்திட்டத்தில் மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. இத்திட்டத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் விமான முனையம் கட்டுமான பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி வருகிறது. கூட்டம் நடத்தக்கூடிய இடமானது பார்க்க வேண்டிய நல்ல இடம் அவ்வளவுதான்.
தேசிய நெடுஞ்சாலை அமைக்குமாறு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கி சாலைகளை மத்திய அரசே அமைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
- இந்த பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளதாவது:
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத் தொகை வழங்குகிறது
இந்த ஊக்கத் தொகை பெறும் 23 பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தின் பயன் பெறும் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும். ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதி அற்றவர்கள் என வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் ரெயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.
அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல. அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல.
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் இணையலாம். உங்களை யாராவது ராணுவத்தில் இணைந்து தான் ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை.
அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன்பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும். அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது.
பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேரத் தகுதி அற்றவர்கள். இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்து விடும் என்று யாராவது கூறினார்களா? என கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:-
மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.
வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏவுகணை சோதனை, அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றை ஓரங்கட்டிவிட்டு மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ள வடகொரியா, முதற்கட்டமாக தென்கொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதன் பின்னர், அடுத்த மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சிங்கப்பூரில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் நேற்று முன் தினம் திடீரென முன்னறிவிப்பு இன்றி வடகொரியா சென்றுள்ளார்.
அந்நாட்டு துணை அதிபர் கிம் யோங் டேய் மற்றும் வெளியுறவு, கலாச்சார துறை மந்திரிகளை வி.கே சிங் சந்தித்துள்ளார். பிராந்திய அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு பாகிஸ்தானுடன் உள்ள அணு ஆயுத உறவு குறித்து வி.கே சிங் தனது கவலையை தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று வடகொரியாவுக்கான இந்திய தூதராக அதுல் கோட்சர்வ் நியமிக்கப்பட்டார். பதவி்யேற்ற இரண்டு நாட்களில் இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பை அவர் நடத்த முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. #India #NorthKorea
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்