என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Volunteers conflict"
- அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வுக்கூட்டம் இன்று காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கள ஆய்வுக்குழு நிர்வாகிகளாக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பேசிய நத்தம் விசுவநாதன், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள் குறித்து தொண்டர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை பார்த்துக்கொள்ளும். எனவே ஆக்கப்பூர்வமான கருத்துகளை நிர்வாகிகள், தொண்டர்கள் கூறலாம் என்றார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மதுரை பைக்காரா செழியன், ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உள்ளிட்டோர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து மேடையை நோக்கி முன்னேறி சென்றனர்.
அவர்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுபற்றி நாங்கள் பேசவேண்டும். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் தொய்விலும், அதிருப்தியிலும் உள்ளனர் என்று தொடர்ந்து பேசினர்.
அத்துடன் அவர்கள் மேடையில் ஏறினர். உடனே மேடையில் இருந்தவர்கள் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.
இதில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது. அவர்கள் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர்.
உடனே மைக்கில் குறுக்கிட்டு பேசிய நத்தம் விசுவநாதன், அமைதியாக இருங்கள், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மலர பணியாற்றுங்கள் என்றார்.
இருந்தபோதிலும் கூட்ட அரங்கில் பரபரப்பு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தங்களிடம் முறையாக கருத்துகள் கேட்கவில்லை என கூச்சலிட்டனர். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வைகோவை பற்றியும் அவரது போராட்டம் பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அக்கட்சியினரும் வைகோவை விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சீமான் மற்றும் அக்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருப்பினும் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.
இதனிடையே வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், வைகோவை பற்றி கிண்டலாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ம.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் தட்டிக்கேட்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு கட்சி தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வைகோவும், சீமானும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport #MDMK #NaamThamizharkatchi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்